அதிமுகவில் பல்வேறு உட்கட்சி மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றிருந்தார். துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இருவரும் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அமித்ஷா இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு இல்லாத வாகனத்தில் முகத்தை மறைக்கும் படி சென்றார். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவியது. இதனை திமுகவினர் கிண்டல் செய்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அதிமுக ஐடி விங், வெளியிட்டுள்ள பதிவில்,
24
அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி
புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், என்ன காரில் சென்றார்? என்ன கலர் கைக்குட்டையில் முகம் துடைத்தார்? என்பது தான் உங்க Reporting-ஆ ஊடகத்தாரே? அவரு முகம் துடைப்பாரு, அட... சளி கூட சிந்துவாரு.. அதெல்லாம் மனித இயல்பு... இதை தான் உள்துறை அமைச்சர் வீட்டு வாசல்ல நின்னு கேமரா வெச்சி பார்த்துட்டு இருந்தீங்களா? அது சரி, எடப்பாடியார் இந்திய உள்துறை அமைச்சரை தானே சந்தித்தார்?
பாகிஸ்தான் நாட்டு அமைச்சரை சந்திக்கலையே? இந்த லட்சணத்தில் செய்தி வெளியிட்டு, அதுவும் 3 வீடியோ போட்டு கஷ்டப்பட்டு Narrative செட் பண்ண முயற்சிப்பதை பார்த்தால், இவங்க எல்லாம் கருணாநிதி டிவி பட்டறையில் இருந்து வந்தவங்க போல..!! என பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
34
முகத்தை மறைத்தாரா எடப்பாடி.?
அதிமுவின் ஐடி விங்க பிரிவின் மற்றொரு பதிவில் எடப்பாடியார் அவர்கள் டெல்லி சென்றாலே பயந்து நடுங்கும் திமுக மற்றும் திமுக ஆதரவு ஊடகங்களுக்கு.. முகத்தை துடைப்பதை, முகத்தை மூடிக்கொண்டு செல்வதாக Fake Narative செட் பண்ணும் வேலைகள் ஈடுபடும் திமுகவிற்கு..
எடப்பாடியார் ஒன்றும் ஆட்சிக்கு வருவதற்கு முன் கருப்பு balloonனை பறக்க விட்டு; ஆட்சிக்கு வந்த பின் வெள்ளை குடையுடன் செல்லவில்லை.. வெளிப்படையாக உள்துறை அமைச்சரை சந்திக்க சென்றார் என்பது நாடறியும். சந்திப்பு முடிந்ததும் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் அவசியம் அவருக்கில்லை.
கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த பின் எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றாத நீங்கள் தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் சிறுவர் முதல் கிழவி வரை நடமாட பயப்படும் நிலையை உருவாக்கிய நீங்கள் தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். தேர்தல் வருகிற நிலையில் மக்களை எதிர்கொள்ள முடியாமல் நீங்கள்தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் சந்திப்பின் நிகழ்வுகளை எடப்பாடியார் ஊடகங்களை சந்தித்து விபரிக்கும் போது நீங்கள் முகத்தை மறைத்து திருப்பிக் கொண்டுதான் செல்ல வேண்டும் என அதிமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது.