Nitin Gadkari Dubai Prince story : சென்னை-காஞ்சிபுரம் சாலைப் பணிகள் முடிவடையாமல் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது. இந்நிலையில், தனது சாலைத் திட்டங்களை துபாய் இளவரசர் பாராட்டியதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.
நாடு முழுவதும் பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல இடங்களுக்கு நாள் கணக்கில் பயணம் செய்யும் நிலை மாறி குறிப்பிட்ட மணி நேரங்களில் செல்ல முடிகிறது. அந்த அளவிற்கு சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலைகளை பராமரிக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே டோல்கேட் அமைக்கப்பட்டு வாகனங்கள் அந்த பகுதியை கடக்க பணமானது வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டோல்கேட் கட்டணமானது அதிகரித்து வருகிறது. 35 ரூபாய் இருந்த நுழைவு கட்டணம் தற்போது 85 ரூபாயை தொட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கே 500 முதல் 800 ரூபாய் வரை டோல் கேட் கட்டணமாக செலுத்த வேண்டியு நிலை உள்ளது.
24
சென்னை - காஞ்சிபுரம் சாலை திட்டம்
சாலைகள் தரமாக இருந்தால் கூட கட்டணங்களை செலுத்த மனம் வரும். ஆனால் மோசமான சாலைகள், முடிவடையாத சாலைகளுக்கும் கட்டணம் வசூல் செய்யும் நிலையும் நீடிக்கிறது. அந்த வகையில் சென்னை-சேலம் பசுமை விரைவுச் சாலையின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச் சாலை 258 கி.மீ. நீளமான எட்டு வழிச் சாலையாக அமைக்கப்படுகிறது,
மொத்த செலவு சுமார் 10,000 கோடி ரூபாய். காஞ்சிபுரம் பகுதி இதில் 59 கி.மீ. அளவிற்கு உள்ளடக்கியது. அதிலும் சென்னை-காஞ்சிபுரம் சாலை திட்டம் என்பது தமிழ்நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் ஒன்றாகும். இது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
34
6 ஆண்டுகளாக முடிவடையாத சாலை திட்டம்
இந்தச் சாலை சென்னையிலிருந்து காஞ்சிபுரத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது, மொத்த நீளம் சுமார் 75 கி.மீ. ஆகும். இது போக்குவரத்து நெரிசலை குறைக்க, பயண நேரத்தை சுருக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் சாலை பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. சென்னையில் இருந்து வேலூர் செல்வதற்கு சுமார் 5 மணி முதல் 6 மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்யும் நிலை தான் உள்ளது. பல இடங்களில் பாலங்கள் முழுமையாக கட்டாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் துபாயில் சாலை திட்டங்களை செயல்படுத்த மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை துபாய் இளவரசர் அழைத்ததாக பில்டப் செய்து பேசியுள்ளார். அமைச்சர் நிதின் கட்கரி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, துபாய் இளவரசர் மோடியிடம் - எங்களுக்கு ஒரு உதவி செய்யுங்கள். அப்போது மோடி ஜி உங்களுக்கு என்ன வேண்டும் என்று மோடி கேட்டுள்ளார்.
அதற்கு அந்த துபாய் இளவரசர் தயவுசெய்து கட்காரி ஜியை 6 மாதங்களுக்கு துபாய்க்கு அனுப்பி வையுங்கள் என தெரிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம் என்றால் எனது தலைமையிலான நெடுஞ்சாலைத்துறை உலக சாதனை செய்துள்ளது. அருணாசல பிரதேசம், மேகாலயா, திரிபுரா ஆகிய இடங்களில் சிறப்பான முறையில் சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள்மகிழ்ச்சியில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.