அரசியல் விமர்சகர் மணிகண்டன் வீராசாமி, நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். விஜய்க்கு அரசியல் பிம்பத்தை உருவாக்க திட்டமிட்டு ஸ்க்ரிப்ட் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் இறந்த துயரச் சம்பவத்திற்குப்ப பிறகு நடிகர் விஜய் பல்வேறு சிக்கல்களை எதிர்பகொண்டு வருகிறார். கரூர் சம்பவத்துக்குப் பிறகு பாஜகவும் அதிமுகவும் தங்கள் கூட்டணியில் விஜய் இணைவதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காய் நகர்த்தி வருகின்றனர். சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. ஆனால், அவர் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் போய் பார்க்கவில்லை என்று பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து அங்கே அவர்களை விஜய் சந்திக்க இருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே விஜய் பனையூரை விட்டு வெளியே வராமலே இருக்கிறார் என விமர்சனங்கள் நிலவுகிறது. இப்போது மீண்டும் விஜய் அதே ரூட்டில் போகிறார் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
இந்நிலையில் அரசியல் விமர்சகர் மணிகண்டன் வீராசாமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகல் விஜய் பற்றியும் அவரது அரசியல் வருகை பற்றியும் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டது, மாணவி அனிதா குடும்பத்தினரைச் சந்தித்து என விஜய் பொதுவெளியில் தோன்றிய நிகழ்வுகள் எல்லாமே ஸ்க்ரிப்ட் தான் என்று மணிகண்டன் வீராசாமி கூறியிருக்கிறார்.
23
மெரினாவுக்கு வந்த விஜய்
அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது: “திரு. விஜய் அவர்கள் சினிமாவில் இருந்தாலும் அவருக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது என்று தெரிந்தது. அப்போது அவர்களுக்கு நிறைய கான்செப்ட் கொடுத்தோம். வெறுமனே திரை பிம்பத்தை வைத்து அரசியல் பண்ண முடியாது. மக்கள் கிட்டப் போகணும். மக்களைத் பிரச்சினைகளைத் தெரிஞ்சுக்கணும். குறிப்பாக போராட்டக் களங்கள் உங்களுக்குத் தெரியணும். அதற்கான வாய்ப்புகள் வரும். நாங்கள் உங்களுக்கு அமைத்துத் தருகிறோம் என்று சொன்னோம்.
"அப்போது நிறைய போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. காவிரி போராட்டம் எல்லாம் நடந்துகொண்டிருந்தது. ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போராட்டம் வந்தது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் நானும் ஒரு ஒருங்கிணைப்பாளர். அந்த சமயத்தில் சந்திரன் ராஜா அவர்கள் மூலம் புஸ்ஸி ஆனந்த் அவர்களைத் தொடர்புகொண்டோம். இப்போது ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இப்போ விஜய் அவர்களை வரச் சொல்லுங்க. நாங்க தான் அவரைக்க கூட்டிட்டு வந்தோம். மெரினாவுக்கு அவர் வந்தார். அதிகாலையில் முகத்தில் கர்ச்சிப் கட்டிக்கொண்டு வந்தார். அவரை மொபைலில் ஒரு போட்டோ எடுத்தோம். அந்தப் போட்டோவை நாங்களே வைரல் பண்ணினோம். இப்படி எல்லாம் அவரை பூஸ்ட்-அப் பண்ணினோம். அது எல்லாம் ஒரு கான்செப்ட். அதன்படி அவர் வந்தார்.
33
எல்லாமே ஸ்க்ரிப்ட் தான்!
"கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னாடியே இந்த வேலைகளை நாங்கள் செய்து கொடுத்தோம். அதற்குப் பிறகு நீட் தேர்வினால் நிறைய பிரச்சினைகள் தமிழ்நாட்டில் நடந்தது. தங்கை அனிதா இறந்துபோறாங்க. அது மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்தியது. அப்பவும் நான் பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தேன். அப்ப நாங்க திரும்பி புஸ்ஸி ஆனந்த் அவர்களைக் கூப்பிட்டோம். தங்கை அனிதா வீட்டுக்கு விஜய் அவர்கள் போகணும் என்று சொன்னோம். பொதுவாக எல்லா அரசியல் கட்சித் தலைவரும் சேரில் உட்காரும் கலாசாரம்தான் இருந்தது. துக்க வீட்டிற்குச் சென்றாலும் சேரில்தான் உட்காருவாங்க. ஆனால் அப்படி எல்லாம் இல்லாமல், தரையில் உட்காரணும், மெழுகுவர்த்தி ஏத்தணும், தங்கை அனிதாவின் சகோதரர் தோளில் கை போடணும் என்பது வரை எல்லாமே ஸ்க்ரிப்ட்... நாங்கள் கொடுத்ததுதான் அது.” இவ்வாறு மணிகண்டன் வீராசாமி தெரிவித்துள்ளார்.