டாஸ்மார்க் கடையில் அதிர்ச்சி! குடிமகன்களிடம் கையும் களவுமாக சிக்கிய ஊழியர்கள்! நடந்தது என்ன?

Published : Oct 24, 2025, 03:19 PM IST

வாணியம்பாடியில், டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலின் மூடியில் ஊசித் துளை இருந்ததைக் கண்டறிந்த நபர், இது போலி மதுபானம் விற்கும் செயலா எனக் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

PREV
14
டாஸ்மாக் கடைகள்

தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் 2,919 மது அருந்தும் பார்கள் உள்ளன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் எம்ஆர்பி விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனால் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் குடிமகன்களுக்கு இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

24
கூடுதல் விலைக்கு மது

இதனை தடுக்கும் வகையில் கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்கவும், தவறுகள் நடக்காமல் வெளிப்படையாக விற்பனை செய்யவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. மேலும் கூடுதல் விலைக்கு மது விற்கும் ஊழியர்கள் கண்டறிந்து பணிநீக்கம் செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில் இதனை முற்றிலுமாக தடுக்கும் வகையில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பில் வழங்கும் நடைமுறையை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் மதுபானங்களில் கலப்படம் என்ற புகார்கள் ஆங்காங்கே எதிரொலித்து வருகின்றன.

34
மதுபிரியர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதம்

சமீபத்தில் ஊட்டியிலும் இப்படியான புகார் கிளம்பிய நிலையில் வாணியம்பாடியில் ஊசி மூலம் போலி மதுபானம் விற்கப்படுகிறதா என மதுபிரியர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நிர்மல். இவர் நேற்று முன்தினம் மாலை விஜிலாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் மதுபாட்டில் வாங்க சென்றுள்ளார். அப்போது அவர் வாங்கிய ஒயின் மது பாட்டிலின் மேல் மூடியில் துளை போட்டு இருந்ததால் அதிர்ச்சியடைந்து மது பிரியர்கள் மதுக்கடை ஊழியர்களிடையே அரசு மது கடையில் மது பாட்டில்களில் ஊசி செலுத்தப்பட்டு போலி மதுபானம் விற்கப்படுகின்றதா என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

44
வீடியோ வைரல்

ஊழியர்கள் இதுகுறித்து சரிவர பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து இளைஞர் நிர்மல் அரசு மதுபான கடையில் வாங்கிய போலி மதுபாட்டிலை கையில் வைத்துக் கொண்டு தனது வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read more Photos on
click me!

Recommended Stories