தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. இதனையடுத்து 2023ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை தொகையாக தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கி வருகிறது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 1.15 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் பல லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டது.