திடீரென எழுந்து பார்த்த போது தனது மனைவி, குழந்தையுடன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜதுரை மனைவியின் கள்ளக்காதலன் அன்பு கணபதியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி நைசாக பேசி மதுகுடிக்க அன்பு கணபதியை அழைத்தார். இருவரும் பரணி தெருவில் உள்ள ஏரிக்கரையில் அமர்ந்து மதுக் குடித்துக்கொண்டிருந்த போது கள்ளக்காதல் தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.