ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் சலுகை கிடைத்திருப்பதால் மக்கள் சேமிப்பு உருவாகும் என பிரதமர் சொல்லியுள்ளார். அப்படியானால், இத்தனை ஆண்டுகள் சேமித்த 20 லட்சம் கோடி ரூபாயை அவர் எங்கே வைத்திருக்கிறார்? மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்க வேண்டும். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை அணுகக் கூடாது,
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 831 கிராமங்களுக்குக் குடிநீர் வழங்கும் திட்டத்தை உருவாக்கி, அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, குட்டம் முதல் ராதாபுரம் வரையிலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
பாமக கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் குறித்த கேள்விக்கு, "சட்டமன்றம் கூடும்போது அதைப் பார்த்துக் கொள்ளலாம்," என்று கூறினார்.