அடி தூள்! பால், நெய், பன்னீர் விலை இவ்வளவு குறைப்பா? ஆவின் அசத்தல் அறிவிப்பு! பொதுமக்கள் குஷி!

Published : Sep 22, 2025, 02:33 PM IST

ஜிஎஸ்டி சீர்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வந்த விலையில், ஆவின் நிறுவனம் பால் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. பால், நெய் விலை எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து பார்ப்போம்.

PREV
14
ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்

ஜிஎஸ்டியில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதாவது ஜிஎஸ்டியில் இன்று முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும். பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெய், பன்னீர், சுண்டக்காய்ச்சிய பால் உள்ளிட்ட பால் பொருட்களின் ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் இதன் விலையும் குறைந்துள்ளது.

24
விலையை குறைக்காத ஆவின்

ஆனால் தமிழக அரசு நிறுவனமான ஆவினில் பால் பொருட்களின் விலை ஏன் குறைக்கப்படவில்லை? என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினார்கள். இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ''ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்ட போது அதைக் காரணம் காட்டி பால் பொருள்களின் விலைகளை உயர்த்திய தமிழக அரசு, இப்போது ஜிஎஸ்டியை குறைத்தபோது ஏன் விலையை குறைக்கவில்லை?'' என்று கூறியிருந்தார்.

34
அன்புமணி கேள்வி

''அமுல் நிறுவனம் 700-க்கும் மேற்பட்ட பால் பொருள்களின் விலைகளை குறைத்துள்ளது. நந்தினி 15 வகையான பொருள்களின் விலைகளை குறைத்துள்ளது. தனியார் நிறுவனங்களும் பத்துக்கும் மேற்பட்ட வகையான பால் பொருள்களின் விலைகளை குறைத்துள்ளன. ஆனால் ஆவின் மட்டும் விலையை குறைக்க மறுப்பது ஏன்?'' எனவும் அன்புமணி தனது கருத்தை பதிவு செய்து இருந்தார்.

44
பால், நெய், பன்னீர் விலை குறைப்பு

இந்நிலையில், ஆவின் நிறுவனம் பால் பொருட்களின் விலையை குறைத்து தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு லிட்டர் நெய் விலை 690 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக குறைந்துள்ளது. 200 கிராம் பன்னீர் விலை 120 ரூபாயில் இருந்து 110 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 500 கிராம் பன்னீரின் விலை 300 ரூபாயில் இருந்து 275 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் 150 மில்லி UHT பால் விலை 12 ரூபாயில் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக ஆவின் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories