சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் விஜய் கட்சிக்கு கூடும் கூட்டம் ரசிகர் கூட்டம் மட்டுமே என்றும், எம்ஜிஆரின் கூட்டத்தை யாராலும் வெல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தேர்தலுக்கு முன்பாக பொதுமக்களை சந்திக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதோ போல தமிழக அரசியலில் கால் பதிக்கவுள்ள நடிகர் விஜய். தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியுள்ளார்.
இதனையடுத்து மக்களை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசி வருகிறார். அந்த வகையில் விஜய் செல்லும் இடங்களில் கட்டுக்கடங்காத வகையில் கூட்டமானது கூடி வருகிறது. இந்த நிலையில் இந்த கூட்டங்களை கண்டு யாரும் பயப்பட வேண்டும் எனவும், எம்ஜிஆர் கூட்டத்தை யாராலும் வெல்ல முடியாது என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
24
மக்கள் ஆசையை தூண்டும் செல்லூர் ராஜூ
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜ் தலைமையில் மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 52 மாதங்களில் திமுக அரசு எதையும் செய்யவில்லை விளம்பரம் மட்டுமே செய்துள்ளது. நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் போட்டு வருகிறார்கள். வாயில் நுழையாத பல திட்டங்கள் உள்ளது ஆனால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை விலைவாசி அளவுக்கு அதிகமாக உள்ளது என கூறினார்.
பல்வேறு துறைகளில் பல கோடிகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது என கூறுகிறார்கள். ஆனால் நாம் வளர்க்கும் நாய்க்கும் வரி போட்டார்கள். இதற்கு எதிர்ப்பு வந்தவுடன் தான் நிறுத்தினார்கள். சதுரங்க வேட்டை திரைப்படம் போல மக்களின் ஆசையை தூண்டி தூண்டி விடுகிறார்கள். ஆனால் திமுகவிற்கு எந்த விதத்திலும் மக்கள் வாக்கு. அளிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
34
கூட்டத்தை வைத்து வெற்றி பெற முடியாது
தமிழக வெற்றி கழகத்திற்கு வரக்கூடிய கூட்டம் எல்லாம் அவருடைய ரசிகர்கள் மட்டுமே வருகிறார்கள். ஆனால் உறுப்பினர்களாக வரவில்லை. அந்தக் கூட்டத்தில் கட்டுக்கோப்பும் இல்லையென விமர்சித்தார். இந்தக் கூட்டத்தை வைத்து நான் முதலமைச்சராக வந்து விடுவேன் என்று சொன்னால் அதெல்லாம் முடியுமா முடியவே முடியாது. எம்ஜிஆர் வருகை தந்த பொழுது தமிழ்நாடு கொந்தளித்தது.
நமது தலைவன் எம்ஜிஆர் மாதிரி ஒருவன் பிறக்கவே முடியாது. எம்ஜிஆரின் சாணக்கிய தனம் விஜய்யிடம் கிடையவே கிடையாது.பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தார்கள் அவர்களுக்கெல்லாம் கூடாத கூட்டமா டி ராஜேந்தர். பாக்கியராஜ் உள்ளிட்டோரெல்லாம் வந்தார்கள் அப்பொழுதும் கூட்டம் வந்தது.
நாமும் குள்ளமணி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை வைத்து பிரச்சாரம் செய்தோம். ஆனால் அப்பொழுது ஓட்டு போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தவக்களை என்கிற குள்ளமணி வராத இடத்தில் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் நாம் லீடிங்கில் இருந்தோம்.
சிலருக்கு கூடுகிற கூட்டத்தை வைத்து நாம் ஏமாந்து விடக்கூடாது. ராமர் பாலத்தை கட்டியது அணில். அதுபோல நமது ஆட்சி அமைய நீங்கள் உதவ வேண்டும் என்றவுடன் நீங்கள் வேற அணிலை நினைத்து விடாதீர்கள் என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.