கும்மிடிப்பூண்டியில் சிலம்பரசன் என்பவர் தனது மனைவி பிரியாவை அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்து புதைத்துள்ளார். 2 மாதங்களாக மனைவி தாய் வீட்டிற்கு சென்றதாக நாடகமாடிய நிலையில், தீபாவளி அன்று வீட்டிற்கு வந்த மைத்துனரிடம் உண்மையை கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த துராப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (39). பெயிண்டிங் உள்ளிட்ட கூலி தொழிலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
24
மட்டன் சாப்பிட்டுக்கொண்டிருந்த சக்திவேல்
இதில் மனைவி பிரியா அவ்வப்போது தமது தாய் வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் சமாதானம் செய்து மீண்டும் கணவன் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக பிரியா கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக சிலம்பரசனின் வீட்டின் அருகே வசிப்பவர்களிடம் கூறிவந்துள்ளார். தீபாவளி பண்டிகையான நேற்று பிரியாவின் சகோதரர் பட்டாசு மற்றும் ஸ்வீட் பாக்ஸுடன் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தட்டு நிறைய இட்லியையும் அதில் மட்டன் குழம்பையும் ஊற்றி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
34
மனைவி கொலை
அப்போது வந்து தனது அக்கா எங்கே என கேட்டபோது, சிலம்பரசன் நடத்தை சரியில்லாத காரணத்தால் உனது அக்காவை அடித்து கொலை செய்து புதைத்து விட்டதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரியாவின் சகோதரர் இது குறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிலம்பரசனிடம் விசாரணை நடத்திய போது மனைவியை கொன்று புதைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து சிலம்பரசனை பிடித்து புதைத்ததாக கூறப்பட்ட எலவூர் ஏழு கண் பாலம் அருகே உள்ள பகுதியில் சடலத்தை தோண்டி எடுத்து வட்டாட்சியர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.