மேலும், தங்கும் விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற அனைத்து மதுக்கூடங்களும் அன்றைய தினம் முழுமையாக மூடப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. விதியை மீறி யாரேனும் மதுபானங்களை விற்பனை செய்ய முயன்றால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மகாவீர் ஜெயந்தி அன்று டாஸ்மாக் கடைகளுக்கான விடுமுறை தமிழகம் முழுவதும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.