தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், நாளை முதல் வெப்பநிலை 3-4° செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும். இந்நிலையில் நாளை முதல் வெயில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதாவது இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
25
இடி மின்னலுடன் மழை
அதேபோல் மார்ச் 29ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 30 மற்றும் 31ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
35
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை
மேலும் ஏப்ரல் 01ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 02ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 3-4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
55
சென்னை வானிலை அப்டேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.