அரசு வழங்கும் மானியக் கடன் திட்டங்கள் மூலம், வாங்கும் கடனில் ஒரு பகுதியை அரசே செலுத்துவதால் திருப்பிச் செலுத்தும் தொகை குறைகிறது. இதுகுறித்த விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ரூ.10 லட்சம் கடன் எடுத்தால் முழுவதையும் திருப்பிச் செலுத்த வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஆனால் அரசு வழங்கும் மானிய திட்டங்களை சரியாக பயன்படுத்தினால், அந்த கடனில் ஒரு பகுதி சுமையாகவே இருக்காது. குறிப்பாக கூட்டுறவு வங்கிகள் மூலம் சலுகைகள் கிடைக்கும், சாதாரண மக்களுக்கு பெரிய ஆதரவாக மாறி வருகிறது.
25
அரசு மானியம் லோன் திட்டங்கள்
இன்றைய காலத்தில் தொழில் தொடங்கவோ அல்லது வீடு கட்டவோ பெரிய தொகை தேவைப்படுகிறது. அதற்காக வங்கியில் கடன் வாங்கும் போது அதிக வட்டி தான் முதலில் பயமுறுத்தும். ஆனால் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களில், நீங்கள் பெறும் தொகையின் ஒரு பகுதியை அரசு நேரடியாகச் செலுத்துவதால், திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை குறைந்து விடுகிறது.
35
கூட்டுறவு வங்கி மானியம் லோன்
கூட்டுறவு வங்கிகள் இந்த வகை மானிய கடன்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக பால் பண்ணை, சிறு தொழில், மற்றும் சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மாடுகள் வாங்குதல், தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குதல் போன்றவற்றிற்கான கடன்கள் கூட, ஒரு பகுதி மானியமாக வழங்கப்படும்.
மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்குபவர்களுக்கு (MSME) அரசின் ஆதரவு அதிகமாக உள்ளது. இயந்திரங்கள் வாங்குதல், தொழில் அமைத்தல் போன்றவற்றிற்கும் நிதி உதவி கிடைக்கிறது. இதனால் தொழில் தொடங்கும் செலவு குறைவதோடு, லாபம் பெறும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
55
வீட்டு கடன் மானியம்
வீடு கட்டும் கனவுடன் இருப்பவர்களுக்கு பல வாய்ப்புகள் திறந்துள்ளன. வட்டி மானியம் வழங்கும் திட்டங்கள் மூலம், கடனின் வட்டி சுமையை அரசே ஒரு அளவிற்கு ஏற்றுக்கொள்கிறது. இதனால் மாத தவணை குறைந்து, நடுத்தர வர்க்க மக்களுக்கு வீடு கட்டுவது எளிதாகும்.