Published : Feb 27, 2025, 02:52 PM ISTUpdated : Feb 27, 2025, 02:55 PM IST
மதுரை மாநகராட்சியில் வீட்டில் விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. மாடு, குதிரை, ஆடு, பன்றி, நாய், பூனை போன்றவற்றுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கட்டண வசூல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.
வீடுகளில் விலங்குகள் வளர்க்க கட்டணம்.! நாய், பூனை, ஆடு வளர்க்க எவ்வளவு தெரியுமா.?
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வீடுகளில் செல்லப்பிராணியாக பூனை, நாய், ஆடு, மாடு, கோழி போன்றவை வளர்க்கப்படுகிறது. அந்த வகையில் உரிய பராமரிப்பு இல்லாமல் சாலைகளில் விடுவதால் மாடுகளால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. மேலும் நாய்களும் உரிய வகையில் பாராமரிப்பு இல்லாமல் உணவுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. நாய்களுக்கு தேவையான தடுப்பூசி எதுவும் செலுத்தாமல் விடுவதால் ரேபிஸ் போன்ற தொற்று ஏற்படுகிறது.
24
வீட்டில் செல்லப்பிராணி
இதனை கருத்தில் கொண்டு வீடுகளில் விலங்குகள் வளர்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் அரசு சார்பாக விதிக்கப்படும். அந்த வகையில் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும், ஒரு முன்மாதிரி திட்டமான வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு கட்டணம் விதித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் படி வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
34
விலங்குகள் வளர்க்க கட்டணம்- மதுரை மாநகராட்சி
மாடு வளர்க்க ரூ.500 கட்டணம், குதிரை வளர்க்க ரூ.750 கட்டணம், ஆடு வளர்க்க 150 ரூபாயும் பன்றி வளர்க்க 500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் அதிகளவு செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய், பூனை போன்றவற்றை வளர்க்க 750 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல மற்றி பிரியாணிகளுக்கு வளப்பதற்கு உரிமை தொகை கட்ட வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
44
புதிய கட்டணம் எப்போது அமல்
ஏற்கனவே செல்லப்பிராணிகள் வளர்க்க 10 ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே மதுரை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பொதுமக்கள் மத்தியில் கருத்து கேட்கப்பட்ட பிறகு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கட்டண வசூல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.