பாரபட்சம் இல்லாமல் அடித்து ஆடும் ஈபிஎஸ்..! எடப்பாடியின் வருகையால் மதுரை மாநாட்டை கைவிட்ட ஓபிஎஸ்?

Published : Sep 01, 2025, 10:29 AM IST

மதுரையில் வருகின்ற 4ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மாநாடு ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

PREV
13
மதுரையில் மாநாடு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார். பாஜக கூட்டணியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில், இதனை சுட்டிக்காட்டி அண்மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் 4ம் தேதி மதுரையில் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தார்.

23
பழனிசாமி சுற்றுப்பயணம்

இந்நிலையில் தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று தொடங்கி வருகின்ற 4ம் தேதி வரை பழனிசாமி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்க உள்ளார்.

33
மாநாடு ஒத்திவைப்பு

இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “14 - 07 - 2025 அன்று சென்னை, வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் டபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க செப்டம்பர் 9ம் தேதி மதுயைில் நடைபெறுவதாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டகள் உரிமை மீட்பு குழுவின் மாநில மாநாடு கழக ஒயர்மட்ட குழு ஆலோசனையின்படி ஒத்திவைக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் பிரசாரம் மேற்கொள்ளும் அதே தேதியில் மாநாடு நடைபெற்றால் கூட்டம் குறைவாக வந்துவிடும் என்பதாலேயே பன்னீர்செல்வம் மாநாட்டை ஒத்தி வைத்திருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories