குஷியில் துள்ளிக்குதிக்கும் குடிமகன்கள்! அரசே ரூ.10 கொடுக்குது! டாஸ்மாக் கடை விற்பனையில் அதிரடி மாற்றம்!

Published : Sep 01, 2025, 09:38 AM IST

தமிழகத்தில் மதுபாட்டில்களை மீண்டும் பெறுவதற்கான திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி மதுபாட்டில்களை வாங்கி, காலி பாட்டில்களைத் திருப்பித் தரும்போது அந்தக் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம். 

PREV
15
டாஸ்மாக் டைகள்

தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் 2,919 மது அருந்தும் பார்கள் உள்ளன. பொதுவாக டாஸ்மாக் மதுக்கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.110 கோடிக்கும், வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழத்தில் மது விற்பனையை சராசரியாக கணக்கெடுத்தால் தினந்தோறும் 70 லட்சம் மதுபாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

25
மதுபாட்டில்கள்

இந்த மதுபாட்டில்களை குடிமகன்கள் மலைவாசஸ்தலங்கள், வனப்பகுதிகளில், காடுகளை வீசி செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, ஏற்காடு உள்பட தமிழ்நாட்டின் மலைவாசல் சுற்றுலா தலங்களில் வனவிலங்குகள் மதுபாட்டில்கள் வீசி செல்வதன் பாதிப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

35
சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதற்கான திட்டத்தை வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். அப்படி இல்லை என்றால் மலைப்பிரதேசங்களில் மதுபானங்கள் விற்க தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.

45
மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பு

இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்துவிட்டு, காலி பாட்டிலை ஒப்படைக்கும்போது அந்த தொகையை திரும்ப ஒப்படைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேலும் இந்த திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

55
டாஸ்​மாக் தொழிலா​ளர் சங்​கங்​கள்

இந்நிலையில் சிவகங்கை, மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் இன்று மதல் அமல்படுத்தப்பட உள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு டாஸ்​மாக் தொழிலா​ளர் சங்​கங்​களின் கூட்​டமைப்​பினர் எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை உட்பட மாநிலம் முழு​வதும் பல்​வேறு இடங்​களில் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்​பாலான கடைகள் 10 அடி நீளம், 10 அடி அகலம் கொண்​ட​வை​யாக உள்​ளன. அவற்​றில் மது​பாட்​டில்​களை வைக்​கவே போதிய இடமில்​லாத நிலை​யில், காலி மது​பாட்​டில்​களை எங்கே வைப்​பது என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories