அன்புமணி கட்சியில் இருந்து நீக்கம்.? ராமதாஸ் இன்று கையில் எடுக்கும் முக்கிய ஆயுதம்

Published : Sep 01, 2025, 08:27 AM IST

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனித்தனியாக பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ராமதாஸ் தரப்பு அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

PREV
14
பாமகவில் உட்கட்சி மோதல்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. பாமகவில் யாருக்கு அதிகாரம் என்ற மோதலால் இரு தரப்பாக பாமக பிரிந்துள்ளது. இருவரும் தனித்தனியாக தொண்டர்களை சந்திப்பது, பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது என அதிரடியாக களம் இறங்கியுள்ளனர்.

முன்னதாக பாமக பொதுக்குழுவில் ராமதாஸ், தனது மகள் காந்திமதியின் மகன் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமித்ததை அன்புமணி மேடையிலேயே எதிர்த்தார். ராமதாஸ், "கட்சியை உருவாக்கியவன் நான். முடிவை நான்தான் எடுப்பேன். விருப்பம் இல்லாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம்" என்று காட்டமாகப் ராமதாஸ் பதிலளித்தார்.

24
தலைவர் பதவி- மகனை நீக்கிய தந்தை

அடுத்த சில நாட்களில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியவர், தான் தான் பாமக தலைவர் என அறிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த அன்புமணி, பொதுக்குழுவால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார். இதனையடுத்து இரு தரப்பும் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை நாடியது. 

இந்த பரபரப்பான சூழலில் ஆகஸ்ட் 9 அன்று அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணியின் தலைமை பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது, ஆனால் ராமதாஸ் தரப்பு இதை ஏற்கவில்லை. ஆகஸ்ட் 17 அன்று நடந்த சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் தன்னை கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக தொடர்ந்து அறிவித்து, அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

34
அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள்

கட்சி நிர்வாகத்தில் அதிகார துஷ்பிரயோகம்.

கூட்டணி முடிவுகளில் தன்னிச்சையான செயல்பாடு.

கட்சி நிதியில் ஏமாற்று முறைகள்.

மாவட்ட அளவிலான நிர்வாகிகளை தவறாக நியமனம் செய்தல்.

கட்சி மாநாடுகளில் ராமதாஸ் மீது பொது விமர்சனம்.

கட்சியின் சமூக நீதி பேரவை தலைவர் பதவியில் தலையிடுதல்.

கட்சி உறுப்பினர்களை பிரிவினை செய்தல்.

கட்சி ஒழுங்கு மீறல், தலைமைக்கு எதிரான செயல்கள், போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க ஆகஸ்ட் 31 வரை கெடு விதிக்கப்பட்டது. அன்புமணி தரப்பு இதுவரை எந்த விளக்கமும் தற்போது வரை அளிக்கவில்லை, மேலும் "நோட்டீஸ் கிடைத்தாலும் பதில் அளிக்க மாட்டோம்" என தெரிவித்துள்ளது.

44
இன்று முக்கிய முடிவு எடுக்கும் ராமதாஸ்

இந்த நிலையில் இன்று தைலாபுரம் தோட்டத்தில் நண்பகல் 12 மணிக்கு ராமதாஸ் தலைமையிலான 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு (ஜி.கே. மணி, அருள்மொழி, முரளிசங்கர் உள்ளிட்டோர் உறுப்பினர்கள்), கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது, தற்காலிக நீக்கம் செய்வது என்பன உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. 

அதே நேரத்தில் ராமதாஸ் தலைமையிலான முடிவு எதிர்கொள்ளவும் அன்புமணி தரப்பு தயாராக உள்ளது. பாமகவில் இருவருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலால் பாமக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை தவித்து வருகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories