வின்பாஸ்ட் கார் உற்பத்தி ஆலையில் தூத்துக்குடி மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது இல்லை என்று குறிப்பிட்டுள்ள கிருஷ்ணசாமி ஆலைக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
வின்பாஸ்ட் ஆலையில் புறக்கணிக்கப்படும் உள்ளூர் மக்கள்
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தொழில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட விவகாரங்களில் தென்தமிழகம் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. தென் தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் அண்மை காலமாக வந்து கொண்டிருக்கின்றது. பல தொழிற்சாலைகள் இயங்கி கொண்டும் இருக்கிறது.
தென் தமிழகத்தில் தொழிற்சாலை பெருகினால் தான் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வட தமிழகத்தை போன்று தென் தமிழகத்தில் வேளாண்மை கிடையாது. வற்றாத ஜீவநீதிகளும் இல்லை. தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடியது தொழிற்சாலைகள் மட்டும்தான். ஆனால், அந்த தொழிற்சாலையில் தென் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. ஆனால் கடினமான பணிகளை தூத்துக்குடி இளைஞர்களுக்கு ஒதுக்குகின்றனர். தூத்துக்குடி வின்ஸ்பாட் தொழிற்சாலையால் அங்குள்ள வட்டார கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. பல குறைபாடுகள் உள்ளது. ஆனால் ஆந்திரா, பீகார் மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. வின்ஸ்பாட் தொழிற்சாலையை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர்.
24
செப்டம்பர் 30ல் போாட்டம்
ஆகவே, தொழிற்சாலைகள் அமையும் இடங்களை சுற்றியுள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதற்கு தனி சட்டம் இயற்ற வேண்டும். இதனை கருத்தில் கொண்டு செப்டம்பர் 30-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களை திரட்டி போராட்டத்தை நடத்த இருக்கின்றோம். மேலும், வின்ஸ்பாட் தொழிற்சாலையில் இருந்து வெள்ளை அறிக்கை கொடுக்கப்பட வேண்டும். தென் தமிழக இளைஞர்கள் கோவை, திருப்பூருக்கு வேலை வாய்ப்புக்கு செல்லக்கூடிய நிலை உள்ளது. ஆகவே, உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
34
கல்லூரியில் நாட்டு வெடி குண்டு
மேலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவனுக்கு நாட்டு வெடி குண்டு வெடித்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை கொண்டு வந்த மாணவன் யார்? எதற்காக கொண்டு வந்தான்? என்று அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு மாற்று வழியை ஏற்படுத்த வேண்டும். வெடிகுண்டு கொண்டு வந்த மாணவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறை கலாசாரங்கள் கல்லூரியில் பரவுவதை தடுக்க வேண்டும். குற்றவாளி யார் என்று காவல்துறையும், கல்லூரி நிர்வாகமும் மறைத்து வருகிறது. ஆகவே மாணவனுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். 1980 ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி அந்த மாணவனின் சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும். இதுபோன்று எதிர்காலத்தில் தவறுகள் நடக்காது.
அதேபோன்று, பொட்டலுரணி கிராமத்தில் உள்ள மீன் கழிவு தொழிற்சாலையை மூட வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உடனடியாக அரசு தொழிற்சாலையை மூட வேண்டும்.
44
அதிகரிக்கும் சுங்க கட்டணம்
அமெரிக்காவில் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது எதிர்பார்க்காத சூழல், எலக்ட்ரானிக் பொருட்கள் இந்தியாவை நம்பி தான் உள்ளது. அமெரிக்காவில் இது சிரமமாகத்தான் இருக்கும். தொழில் முனைவர்கள், திருப்பூர் பின்னலாடை பாதிப்பு, ஆம்பூர் வேலூர் தோல் சம்பந்தப்பட்ட தொழில் பாதிப்பு., தூத்துக்குடியில் கடல் உணவுப் பொருட்கள் ஆகியவை பாதிப்பு. ஆகவே தற்காலிகமாக அனைவரும் சமாளிக்க வேண்டும். இந்தியாவின் கௌரவம், இறையான்மை சம்பந்தப்பட்ட விஷயம், சுங்க சாவடி கட்டணம் ஏறி கொண்டே போகிறது. ஆகவே அரசு இதற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.