அதுவும் ஓடும் பஸ்சிலேவா இப்படி! க.காதல் ஜோடி செய்த காரியம்! நேரில் பார்த்த பயணிகள்!

Published : Oct 06, 2025, 08:28 AM IST

Erode Illegal Love Couple: கோபிசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கள்ளக்காதல் விவகாரம் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து ஓடும் பேருந்தில் கள்ளக்காதல் செய்த சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

PREV
15
கள்ளக்காதல்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே காசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (35). சென்ட்ரிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணியக்காரன்பாளையத்தைச் சேர்ந்தவர் சுமிதா (40). கார்மெண்ட்ஸ் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு, கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ராஜ்குமாருக்கும், சுமிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

25
கண்டித்த மனைவி

இந்த விவகாரம் நாளடைவில் ராஜ்குமாரின் மனைவி ரேவதிக்கு தெரியவந்ததை அடுத்து கணவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு எற்பட்டுள்ளது. பின்னர் மனைவியை சமாதானம் செய்ய சுமிதாவுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என ராஜ்குமார் சத்தியம் செய்துள்ளார். இதனையடுத்து ராஜ்குமார், கடந்த 29ம் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார்.

35
ஓடும் பேருந்தில் கள்ளக்காதல் ஜோடி

பின்னர், வீடு திரும்பவில்லை. இதையடுத்து, கடந்த 1ம் தேதி ரேவதிக்கு போன் செய்த ராஜ்குமார் சென்னையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி இரவு 11 மணியளவில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள பல்லக்காபாளையம் தனியார் கல்லூரி அருகே உணவுக்காக நிறுத்தப்பட்ட பேருந்தில் இருந்து இறங்கிய சிறிது நேரத்தில் மயங்கினர். பின்னர் அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

45
போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் விசாரணையில் கோபி அருகே, காசிபாளையத்தைச் சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி ராஜ்குமார், சுமிதா என்பது தெரியவந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சுமிதாவும், ராஜ்குமார் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

55
கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

கள்ளக்காதல் ஜோடி இருவரும், கோவையிலிருந்து சேலத்திற்கு பேருந்து ஏறி வந்ததாகவும், அதற்கு முன்பாகவே மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு பேருந்தில் ஏறி, பயணித்துள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து இருவரது வீட்டுக்கும் போலீசார் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு இருவரது உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Read more Photos on
click me!

Recommended Stories