உங்க அப்பா கருணாநிதிக்கும் ராமநாதபுரத்துக்கு என்ன சம்பந்தம்.! அப்துல் கலாம் பேரை வையுங்க பொங்கிய மணிகண்டன்

Published : Oct 06, 2025, 08:17 AM IST

Karunanidhi name for Ramanathapuram bus stand : முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு, கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

PREV
14

ராமநாதபுரம் மாவட்டத்தில் 737.88 கோடி மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டு திட்டங்களைத் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 3ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, 2023ஆம் ஆண்டு 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

16,909 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்தப் புதிய பேருந்து நிலையம், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களிலிருந்து ராமேஸ்வரம் வழியாக செல்லும் பேருந்துகளுக்கு சிறப்பான வசதிகளை வழங்கும். இதன் மூலம், ராமநாதபுரம் நகரில் ஏற்கனவே நடைபெற்று வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளுக்கு வசதியான சூழலை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

24

திறப்பு விழாவின்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "இந்தப் புதிய பேருந்து நிலையம் ராமநாதபுரம் மக்களின் நலனுக்காகவும், போக்குவரத்து மேம்பாட்டுக்காகவும் முக்கியமான திட்டமாக அமையும் என தெரிவித்திருந்தார். 

இதனிடையே ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் பெயரை சூட்டியுள்ளனர். அந்த வகையில் "முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நினைவு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

34

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர் இரவு நேரத்தில் ரகசியமாக நடந்ததாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக , உள்ளூர் மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் சர்ச்சை எழுப்பியுள்ளனர். ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அல்லது மன்னர் முத்து ராமலிங்க சேதுபதி அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என கோரியிருந்தனர், 

ஏனெனில் இந்த நிலையம் சேதுபதி ராஜவம்சத்திற்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது. ஆனால் கருணாநிதி பெயர் வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

44

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசிய போது, உங்க அப்பா கருணாநிதிக்கு ராமநாதபுரத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது. அவர் பெயர் எதற்காக இங்கே புதிய பேருந்து நிலையத்திற்கு வைக்கீறீர்கள். இந்த மண்ணுக்காக உழைத்து, பெயர் புகழ் பெற்ற அப்துல்கலாம் அவர்களின் பெயர்களை வைக்க வேண்டும் அல்லது ராமநாதபுரத்துக்கு மருத்துவமனைக்கான இடம், ரயில்வேக்கான இடம்,

 மருத்துவக் கல்லூரிக்கான இடம், கலெக்டர் அலுவலகத்திற்கான இடம், தற்போது உள்ள பேருந்து நிலையம் அனைத்துமே ராமநாதபுரம் மன்னரே நிலம் தான், எனவே மன்னரின் பெயரை வைக்க வேண்டும். எனவே அதிமுக ஆட்சி அமைந்தும் கருணாநிதி பெயரில் உள்ள பேர்ந்து நிலையத்தின் பெயர் மாற்றப்படும் என மணிகண்டம் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories