10 ரூபாய் மந்திரியின் பக்கா ஸ்கெட்ச்.. கரூர் விவகாரத்தில் தமிழக அரசை லெப்ட், ரைட் வாங்கிய பிரேமலதா

Published : Oct 06, 2025, 07:23 AM IST

கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டி உள்ளார்.

PREV
14
குறுகலான பகுதியில் அனுமதி அளித்தது யார்?

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் இல்லம் தேடி, உள்ளம் நாடி என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரேமலதா கரூர் அசம்பாவித சம்பவத்தைக் குறிப்பிட்டு தமிழக அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை அள்ளி வீசினார்.

கரூரில் விஜய்யின் பிரசார கூட்டத்திற்கு குறுகலான பாதையில் அனுமதி கொடுத்தது யார். அந்த பகுதியின் மொத்த அகலமே 100 அடி தான். அதில் சுமார் 60 அடியை விஜய்யின் பேருந்தே ஆக்கிரமித்துக் கொண்ட நிலையில் மீதம் உள்ள 40 அடியில் மக்கள் எப்படி நிற்க முடியும்..? அப்படிப்பட்ட குறுகலான பாதையில் அனுமதி அளித்தது யார் என அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

24
ஆம்புலன்ஸை அனுமதித்தது யார்?

குறுகலான பாதையில் 27000 நபர்கள் நின்று கொண்டிருக்கும் நிலையில், அப்படிப்பட்ட நெரிசல்களுக்குள் ஆம்புலன்ஸை அனுமதித்தது யார்? ஆம்புலன்ஸ் வந்ததால் தான் மக்கள் பதற்றமுற்று கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது.

34
காலணி வீசியது யார்?

விஜய்யை பார்ப்பதற்காக காலை முதல் நின்று கொண்டிருக்கும் அவரது தீவிர ரசிகர்களோ, தொண்டர்களோ அவர் மீது காலணி, கல் வீசுவார்களா..? அப்படியென்றால் விஜய் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் மீது கல், காலணிகளை வீசியது யார்? உள்ளூர் ரௌடிகள் தான் இப்படிப்பட்ட காரியத்தை செய்துள்ளனர். இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

44
பக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய செந்தில் பாலாஜி

விஜய் ஏற்கனவே 5 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அப்படிப்பட்ட சூழலில் கரூரில் மட்டும் அசம்பாவிதம் நடைபெற்றது எப்படி? இந்த விவகாரத்தில் 10 ரூபாய் மந்திரி பக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ளார். யார் மறைத்தாலும் உண்மை ஒரு நாள் வெளிவரும். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய காவல் துறையினர் பயன்படுத்தப்படவில்லை. பாட்டிலுக்கு 10 ரூபாய் என விஜய் பாட்டாக பாடிவிட்டு சென்றுள்ளார். இதனை நான் எப்பொழுதும் வசனமாக பேசுவேன். இது தான் வித்தியாசம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories