இறால் 65 முதல் கமகமக்கும் பிரியாணி வரை.! நிர்வாகிகளுக்கு விஜய்யின் தடபுடல் விருந்து- பட்டியல் இதோ

Published : Mar 28, 2025, 08:17 AM IST

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இதில் 137 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 1800க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

PREV
14
இறால் 65 முதல் கமகமக்கும் பிரியாணி வரை.! நிர்வாகிகளுக்கு விஜய்யின் தடபுடல் விருந்து- பட்டியல் இதோ

TVK Vijay General Committee Meeting : தமிழகத்தில் அதிமுக- திமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி, மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில், இந்த கட்சிகளுக்கு போட்டியாக அரசியல் களத்தில் குதித்துள்ளார் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என கட்சிக்கு பெயர் சூட்டிய விஜய், தனது முதல் அரசியல் மாநாட்டு நடத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்.

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்து அதற்கான பணிகளையும் விஜய் தொடங்கியுள்ளார். தற்போது நடித்து வரும் ஜனநாயகன் என்ற திரைப்படம் தான் தனது கடைசி திரைப்படம் எனவும், இதற்கு பிறகு முழு நேர அரசியலில் இறங்க இருப்பதாக கூறியுள்ளார்.

24

விஜய்யின் திட்டம் என்ன.?

அதற்கு ஏற்றார் போல தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டங்களை விஜய் ஆலோசித்து வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று மக்களை சந்திக்கவுள்ளாதக கூறப்படுகிறது. இந்த நிலையில் தவெகவின் முதல் ஆண்டை சிறப்பாக கொண்டாடிய விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டமானது இன்று நடைபெறவுள்ளது.

சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இதில் 137 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 1800க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
 

34

காலை உணவு பட்டியல்

இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பும், தனியார் செக்கியூரிட்டி பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில், அழைப்பிதழில் க்யூ ஆர் கோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் செயற்குழு பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகளுக்கு சுவையான உணவுகளை வழங்க விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து காலையில் பொங்கல், வடை, சட்னி, சாம்பார் மற்றும் டீ என 500 நபர்களுக்கு உணவு வழங்கப்படவுள்ளது.

44

மதிய விருந்து பட்டியல்

மதியம் 2500 பேருக்கு சுடச்சுட மதிய விருந்து வழங்கப்படவுள்ளது. அதில், 1.மால் பூவா ஸ்வீட், 2.வெஜ் சூப், 3.ஊறுகாய், 4.இஞ்சி துவையல், 5.தயிர் பச்சடி, 6.சப்பாத்தி+ பன்னீர் பட்டர் மசாலா, 7.வெஜ் மட்டன் பிரியாணி, 8..சாதம், 9..சைவ மீன் குழம்பு, 10.சாம்பார், 11.மிளகு ரசம், 12. இறால் 65, 13..அவியல், 14..ஆனியன் மணிலா, 15.பகோடா 16.உருளை பட்டானி வருவல், 17.தயிர் வடை, 18.அப்பளம், 19.வெத்தலை பாயாசம், 20. மோர், 21.ஐஸ்கிரீம் ஆகிய உணவுகள் தயாராகி வருகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories