உசிலம்பட்டி காவலர் படுகொலை! போலீசுக்கே பாதுகாப்பு இல்லை! முதல்வர் தூங்குகிறாரா? அண்ணாமலை விளாசல்!

Published : Mar 28, 2025, 07:59 AM ISTUpdated : Mar 28, 2025, 08:03 AM IST

Usilampatti Police Officer Murder: மதுரை உசிலம்பட்டியில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் காவலர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
15
உசிலம்பட்டி காவலர் படுகொலை! போலீசுக்கே பாதுகாப்பு இல்லை! முதல்வர் தூங்குகிறாரா? அண்ணாமலை விளாசல்!
டாஸ்மார்க் கடை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(40).  2009ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த இவர் தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஒட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரும் அவரது நண்பர்  ராஜாராம் என்பவருடன் நேற்று முத்தையன்பட்டி டாஸ்மார்க் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத சிலரிடம் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின் அங்கிருந்து வெளியே வந்த முத்துக்குமார், ராஜாராம் அகியோர் அருகில் உள்ள தோட்டத்திற்கு வந்துள்ளார்.

25
காவல் முத்துக்குமார் கொலை

அப்போது அடையாளம் தெரியாத சிலர், பின்னால் வந்து காவல் முத்துக்குமாரை கல்லால் தாக்கினர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிந்தார். காவலருடன் வந்த அவரது உறவினரான ராஜாராம் என்பவரும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் குற்றங்களைத் தடுக்க முடியாமல் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டு, இன்று அவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் என அண்ணாமலை கூறியுள்ளார். 

35
அண்ணாமலை

இதுகுறித்து தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநரான,  முதல் நிலைக் காவலர்  முத்துக்குமார் டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், கல்லைத் தலையில் போட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகமெங்கும், மதுவாலும், போதைப் பொருள்களாலும் குற்றச் செயல்கள் பல மடங்கு அதிகரித்து விட்டன. ஆனால் முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கிறார். குற்றங்களைத் தடுக்க முடியாமல் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டு, இன்று அவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழலில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. 

45
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உண்மையில் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அக்கறை இருந்திருக்குமேயானால், மது விற்பனையை முறைப்படுத்தி இருக்க வேண்டும், போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், தனது கட்சியினரின் வருமானம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதன் விளைவு, தமிழகத்தில் பெருகி வரும் குற்ற செயல்களும், உயிர்ப்பலிகளும்.

55
அண்ணாமலை கேள்வி

இனியாவது தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் நலனைக் குறித்துச் சிந்திப்பாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories