தாம்பரம் டூ ராமேஸ்வரம் புதிய ரயில்! அண்ணாமலை கோரிக்கையை ஏற்ற ரயில்வே அமைச்சர்!

Published : Mar 27, 2025, 07:56 PM IST

தாம்பரம் டூ ராமேஸ்வேரம் இடையே புதிய ரயில் இயக்க ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

PREV
14
தாம்பரம் டூ ராமேஸ்வரம் புதிய ரயில்! அண்ணாமலை கோரிக்கையை ஏற்ற ரயில்வே அமைச்சர்!

 Tambaram and Rameswaram New Train: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பனில் கடல் நடுவே ரூ.550 கோடி செலவில் புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. பழைய பாம்பன் ரயில் பாலத்தில் அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டதால் கடந்த 2020ம் ஆண்டு முதல் புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. கடல் காற்று மற்றும் சவாலான வானிலைக்கு மத்தியில் பாம்பன் புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்தன.

24
Annamalai BJP Train

இதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பிறகு பம்பன் புதிய பாலத்தில் ரயில்களை இயக்கி சோதனை நடத்தப்பட்டன. பாம்பன் புதிய பாலத்தில் 72.5 மீட்டர் நீளமுள்ள மையப் பகுதி உள்ளது. இதன் மூலம் கப்பல்கள் செல்வதற்காக 17 மீட்டர் உயரத்திற்கு பாலத்தை உயர்த்த முடியும். இந்த புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி வரும் 6ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக பிரதமர் ராமேஸ்வரம் வருகிறார்.

இதற்கிடையே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென டெல்லி சென்றிருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், அண்ணாமலையும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் பரவியது.

இனிமே தான் வெயிலின் ஆட்டமே இருக்காம்! பொதுமக்களை அலர்ட் செய்து அலறவிடும் வானிலை மையம்!

34
Tambaram and Rameswaram New Train

இந்நிலையில், டெல்லி சென்றிருந்த அண்ணாமலை, தாம்பரம் முதல் ராமேஸ்வரம் வரையிலான புதிய ரயில் சேவைக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அண்ணாமலை, ''மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரை இன்று சந்தித்து கூட்டு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

44
Indian Railway, Pamban Bridge

இந்த ஆய்வுக் கூட்டத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மக்களும், பாஜகவும் அளித்த கோரிக்கையை ஏற்று தாம்பரத்தில் இருந்து சிதம்பரம், திருவாரூர் மற்றும் திருத் துரைப்பூண்டி வழியாக ராமேஸ்வரத்திற்கு ஒரு புதிய ரயில் இயக்குவதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய ரயில் சேவை ஏப்ரல் 6ம் தேதி பாம்பன் பால திறப்பு விழா அன்று சேவையை தொடங்கும்'' என்று தெரிவித்துள்ளார். 

சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு தினமும் 2 ரயில்கள் இயக்கப்படும் நிலையில், கூடுதலாக ஒரு ரயில் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் தாம்பரம் டூ ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் கால அட்டவணை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வளவு சர்ச்சைகளுக்கு இடையே தமிழகத்தில் வானிலை ஆய்வு அறிக்கையில் இந்தி மொழி சேர்ப்பு!

Read more Photos on
click me!

Recommended Stories