பள்ளி கட்டடம் இல்லாததால் மரத்தடியில் நடக்கும் வகுப்பு! பொங்கியெழுந்த அண்ணாமலை!

புதுக்கோட்டையில் மரத்தடியில் பள்ளி வகுப்பு நடந்ததற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

Annamalai condemned the school class being held under a tree in Pudukkottai ray

BJP Annamalai condemned Tamilnadu Goverment: இந்தியாவில் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு கல்வி, பொருளாதாரம், மருத்துவ கட்டமைப்பு வசதிகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள் அமைந்துள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு இனையாக மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லிதரப்படுகின்றன.

Annamalai condemned the school class being held under a tree in Pudukkottai ray
Tamilnadu School

ஆனால் ஒரு சில அரசுப்பளிகளில் கட்டடங்கள் இல்லை. இதனால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பாடங்களை கற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் போதிய கட்டடம் இல்லாததால் மாணவர்களுக்கு மரத்தடியில் உட்கார்ந்து ஆசிரியை பாடம் சொல்லி கொடுக்கும் காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில், இந்த விஷயத்தை கையிலெடுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, 'திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வகுப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''கடந்த மாதம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சியில், பள்ளிக் கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுவதைப் பார்த்தோம். இதோ, அதற்கு அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், பொன்னகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

பள்ளி சீருடை அளவெடுத்த ஆண் டெய்லர்! கட்டாயப்படுத்திய ஆசிரியை! மாணவி பரபரப்பு புகார்! நடந்தது என்ன?
 


Pudukkottai School

தமிழகம் முழுவதும் இது போல எத்தனை பள்ளிகள் இருக்கின்றனவோ தெரியவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சியில், 6,000 பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவையில், அமைச்சர் திரு. பெரியசாமி கூறியிருந்தார். பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதற்கும், தரம் உயர்த்துவதற்கும் மொத்தம் ரூ. 7,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 2497 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்றுவருவதாகவும், இந்த ஆண்டும், ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்தார்.

Annamalai Slams Stalin

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் கட்டிடம் இல்லாமல் இருப்பதும், மேற்கூரைகள் இடிந்து விழுவதும் தொடர்ந்து செய்திகளில் வெளிவருகின்றன. நாங்கள் கேட்பதெல்லாம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வகுப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன, குறிப்பாக, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்படி எத்தனை வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை, திமுக அரசு வெளியிட வேண்டும் என்பதுதான். 

ஆனால் பல நாட்கள் கடந்தும் இதுவரை அதற்கு பதில் இல்லை.  திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் வெள்ளை அறிக்கை வெளியிடக் கேட்கிறோம். உண்மையில் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கட்டிடங்கள் கட்டியிருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் இத்தனை தாமதம், தயக்கம்?'' என்று அண்ணாமலை கூறியுள்ளார். 

தொழில்முனைவோருக்கு ChatGPT பயிற்சி: வணிகத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்த வாய்ப்பு!

Latest Videos

vuukle one pixel image
click me!