இரண்டு வயது குழந்தையின் கூட பார்க்காமல்.. 40 வயது திமுக நிர்வாகி செய்த வேலை.! நடந்தது என்ன?

Published : Feb 27, 2026, 06:33 PM IST

கிருஷ்ணகிரியில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண்ணின் 2 வயது குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

PREV
15
காதல் திருமணம்

திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா(28). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே சேசுராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிரின்சி(24) என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரின்சி சேசுராஜபுரம் கிராமத்தில் உள்ள தனது தாயாருடன் வசித்து வருகிறார். அவ்வப்போது, சூர்யா தனது குழந்தையை பார்த்து விட்டு சென்றுள்ளார்.

25
சிறுமியை சீரழித்த கொடூரன்

இந்நிலையில், பிரின்சிக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி பெரியநாயகம் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் கணவன், மனைவி போல் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் 11ம் தேதி குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது. இதனிடையே தனது குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக அஞ்செட்டி காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை சூர்யா புகார் அளித்தார். இதனையடுத்து சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

35
போக்சோ வழக்கில் திமுக நிர்வாகி கைது

இந்நிலையில், குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், குழந்தையின் பிறப்புறுப்பில் உள்காயங்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீஸ் விசாரணையில் பிரின்சியின் கள்ளக்காதலன் பெரியநாயகம், பிரின்சி வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது 2 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பெரியநாயகம் மீது போச்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பெரியநாயகம் திமுக இளைஞர் அணி கிளை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

45
பச்சிளம் குழந்தை என்று பாராமல் பாலியல் வன்கொடுமை

பச்சிளம் குழந்தைகள், கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள், வீட்டில் வசிக்கும் வயதான முதியவர்கள் என யாருக்குமே பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழகத்தை மாற்றிவிட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் எனப் பெருமை பேசுவதும், பல கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்வதும் வெட்கக் கேடானது. கஞ்சா விற்பனையில் தொடங்கி கள்ளச்சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த திமுக நிர்வாகிகளைக் கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்ததன் விளைவே, தற்போது அரங்கேறியிருக்கும் இந்த கொடூர சம்பவத்திற்கு அடிப்படை காரணம் எனப் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பச்சிளம் குழந்தை என்று பாராமல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குரூர மனம் படைத்த திமுக நிர்வாகிக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

55
காமவெறி பிடித்த மிருகங்களை வளர்த்துவிடும் அறிவாலயம்

கிருஷ்ணகிரியில் 2 வயதே ஆன பெண் குழந்தையைத் திமுகவின் இளைஞரணி கிளைச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. ஆட்சி அரியணை ஏறிய ஐந்தாண்டுகளில், "திமுககாரன்" எனும் அடைமொழி வழங்கி, ஆளுங்கட்சி கர்வத்தை ஊட்டி வளர்த்து, பச்சிளம் குழந்தையைக் கூட விட்டுவைக்காமல், பாலியல் இச்சையில் வேட்டையாடும் கொடூர மிருகங்களை வளர்த்துவிடும் கூடாரமாகவே மாறிவிட்ட திமுக ஆட்சி ஒழிந்தால் மட்டுமே தமிழகத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories