Chennai Weather: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் வேசான பனிமூட்டம் காணப்படும்.
தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு பிப்ரவரி மாதத்திலேயே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 வரை வெளியில் செல்வதற்கே பயப்படுகின்றனர். அப்படி இருந்த போதிலும் விருதுநகர், திண்டுக்கல், கொங்கு பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
25
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
35
லேசான மழைக்கு வாய்ப்பு
அதேபோல் நாளை மற்றும் மார்ச் 05ம் தேதி வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் வேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை (28-02-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
55
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
இதனிடையே எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என பிரதீப் ஜான் கூறியுள்ளார். அதாவது அவரது எக்ஸ் தளத்தில்: தெற்கு தமிழ்நாடு மற்றும் கொங்கு மண்டலத்தில் தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இன்றும் இதே நிலை தொடரும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, வால்பாறை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நெல்லை போன்ற பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.