திமுக மீதான கம்யூனிஸ்ட் விமர்சனம்... எதையாவது சொன்னா தானே கட்சி நடத்த முடியும்..! விமர்சனத்தை லெப்ட்ஹேண்டில் டீல் செய்யும் KN நேரு

Published : Sep 16, 2025, 09:26 AM IST

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்திற்கு எதையாவது பேசினால் தானே அவர்களும் கட்சி நடத்த முடியும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

PREV
14
திமுக அரசை ரவுண்டு கட்டி அடிக்கும் எதிர்கட்சிகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியாளர்களான திமுக கூட்டணி மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மீதான விமர்சனங்களை பொதுமக்கள் மத்தியில் சுட்டிக்காட்டி வருகிறார். அதே போன்று பாமக தலைவர் அன்புமணி தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் போது திமுக.வின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி விமர்சித்து வருகிறார்.

24
பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை

இதனிடையே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திமுக அரசு பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக அனைத்தையும் ஏற்றுக்கொண்டு இருக்க முடியாது என்று கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிழப்பியது.

34
கட்சி நடத்துவதற்காக எதையாவது பேசத்தான் செய்வார்கள்

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கூறுகையில், “அவர்களும் எதையாவது சொன்னால் தானே கட்சி நடத்த முடியும். திமுக.வினர் செய்வது அனைத்தும் சரி தான். அவர்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டார்கள் என்று சொல்லிவிட்டால் அவர் பின்னால் யார் செல்வார்கள்.?

44
நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்

உதாரணமாக எடப்பாடி பழனிசாமியே இருக்கட்டும். நாங்கள் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று சொல்கிறார். மகளிருக்கு இலவசப் பயணம், மகளிருக்கு உதவித் தொகை, மாணவர்களுக்கு உயர்கல்விப் பயில ரூ.1000 உதவித் தொகை உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இவை அனைத்தும் நல்ல திட்டங்கள் என பழனிசாமிக்கும் தெரியும். ஆனால் இந்த திட்டங்களை பாராட்டினால் அவரை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எதையாவது விமர்சித்துக் கொண்டே இருந்தால் தான் கட்சி நடக்கும். தோழமைக்கட்சி என்ற அடிப்படையில் அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு நாங்கள் மதிப்பு அளிக்கிறோம்.

அவர்களது கோரிக்கை நியாயமாக இருக்கும் பட்த்தில் நிச்சயமாக அதனை செய்து முடிக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories