Tamilnadu Weatherman Pradeep John: அடுத்த 3 நாட்களுக்கு சென்னை உட்பட வட தமிழகம் முழுவதும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் வெட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சுகின்றனர். அதேநேரத்தில் மாலை அல்லது இரவு நேரங்களில் வட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. எவ்வளவு தான் மழை பெய்தாலும் குளிர்ச்சியான சூழல் நிலவவில்லை.
25
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
35
சென்னையில் கனமழை
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28°செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னையில் நேற்று நள்ளிரவு பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மழை குறித்து பிரதீப் ஜான் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: வேலூரில் இருந்து புயல்கள் KTCC எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகின்றன. அடுத்த 2 மணி நேரத்திற்குள் நகரின் மேற்கு எல்லையை அடைய வாய்ப்புள்ளது. நாளை சென்னைக்கு ஒரு அற்புதமான வானிலை நாளாக இருக்கும், மேகமூட்டத்துடன் தொடங்கும். வானம் மேகமூட்டத்துடன் இருப்பதை பார்க்கலாம்.
55
வட தமிழகம் முழுவதும் டமால் டுமீல்
அடுத்த 3 நாட்களுக்கு சென்னை உட்பட வட தமிழகம் முழுவதும் டமால் டுமீல் எனப்படும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அதேபோல் செப்டம்பர் இரண்டாம் பாதி வட தமிழ்நாட்டிற்கு ஒட்டுமொத்தமாக இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு மிகவும் நன்றாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.