திமுகவை பற்றி பத்திரிகையாளர் போடுகிறார்களா? எல்லாம் பயம் வீட்ல சாக்கடையை ஊத்திடுவாங்க... எடப்பாடி காமெடி

Published : Sep 16, 2025, 09:20 AM IST

ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என எடப்பாடி பழனிசாமி கூறினார். சிலர் கைக்கூலிகளாக செயல்படுவதாகவும், ஊடகங்கள் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கடுமையாக சாடினார்.

PREV
14
அதிமுகவில் அதிகார மோதல்

எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் உட்கட்சி பிரச்சனை தொடர்பாக பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார் என பத்திரிக்கையில் தகவல் வெளியானது. இதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 117 வதுபிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடபழனியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர், 

பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும், வங்க கடல் பகுதியில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 16ஆம் தேதி முதல் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வானிலை மையத்திடம் தகவல் கேட்கப்பட்டது. அப்போது மழை வருவது உறுதி என சொன்னார்கள். எனவே அந்த தேதியில் தருமபுரியில் கூட்டத்தை நடத்தாமல் வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

24
டெல்லி செல்லும் அமித்ஷா

28, 29ஆம் தேதிகளில் தருமபுரியில் நடத்தப்படும் என அறிவித்தோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிமுக உட்கட்சி பிரச்சனை குறித்து உள்துறை அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி செல்கிறார் என பத்திரிக்கைகள் செய்தி வெளியானது. அதிமுகவை எவராலும் ஒன்னும் பண்ண முடியாது, சொல்லுறேன் எழுதிக்கொள். 

ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம் தான் முக்கியம் , ஒரு இம்மி அளவு கூட விட்டுக்கொடுக்க மாட்டேன் என எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்தார். சிலபேர் கைக்கூலியாக வைத்து ஆட்டம் போடுகிறார்கள் எனவும், அந்த கைக்கூலிகள் யார் என அடையாளம் கண்டுவிட்டோம் , அவர்களுக்கு விரைவில் முடிவுக்கட்டப்படும் எனவும் ஆவேசமாக கூறினார்.

34
அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக

சில பேர் அதிமுக ஆட்சியை கவிழ்க்க ஓட்டு போட்டார்கள். மன்னித்து துணை முதல்வர் பதவி கொடுத்தோம். அடுத்த சில மாதங்களில் தலைமை கழகம் அடித்து நொறுக்கினார்கள் அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டுமா.? என கேள்வி எழுப்பினார். மத்தியில் இருந்து யாரும் என்னை அச்சுறுத்தவில்லை, நமக்கு நல்லது தான் செய்தார்கள் ,ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கபலிகரம் செய்ய சிலர் பார்த்தார்கள், 

ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள், யார் என்பது உங்களுக்கு தெரியும். அவர்களிடம் இருந்து காப்பாற்றி கொடுத்தவர்கள் மத்தியில் இருந்தவர்கள் தான் என தெரிவித்தார். பத்திரிக்கை எல்லாம் திமுவிற்கு அடிமையாக உள்ளது. ஒரு சில பத்திரிக்கையை தவிர, திமுகவைப்பற்றி ஏதாவது போடுகிறார்களா.? என கேள்வி எழுப்பியவர், எல்லாம் ஜால்ரா பயம், வீட்டில் வந்து சாக்கடை ஊற்றி விடுவார்கள் என பயம்.

44
அதிமுகவை புறக்கணிக்கும் ஊடகம்

அதிமுககாரன் நல்லவன் எதுவும் செய்வதில்லை. அதனால் எப்படி வேண்டும் என்றாலும் செய்தி போடலாம் என போடுகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளை அனுசரிக்கவில்லையென எழுதுகிறார்கள். பத்திரிக்கை தர்மம் தற்போது இல்லையென்பது தான் உண்மை. ஊடகம் 4 நிமிடம் தான் அதிமுகவை காட்டுகிறார்கள். ஆனால் ஒன்றும் இல்லாத செய்தியை நாள் முழுவதும் காட்டுவார்கள். நன்மையான செய்தியை காட்டுங்கள், நடுநிலையோடு நடந்து கொள்ளுங்கள். உண்மை செய்தியை வெளியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

Read more Photos on
click me!

Recommended Stories