அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, சீனா சென்று திரும்பிய நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனையில் அவருக்கு சிறுநீரக தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி. கடந்த அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தார். வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.
24
சொத்துக்குவிப்பு வழக்கு
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு கே.சி.வீரமணி திமுக வேட்பாளர் தேவராஜிடம் தோல்வி அடைந்தார். இவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறார்.
34
சீனாவுக்கு சுற்றுலா
இந்நிலையில் இவர் கடந்த மாதம் சீனாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மீண்டும் திரும்பி உள்ளார். இதனிடையே திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
அப்போது சிறுநீரக தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்த அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.