தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 33 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதி.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூரில் வேலுசாமிபுரம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
24
கண்ணீருடன் குடும்படுத்தினர்
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் அஞ்சப்படுகிறது. திரும்பும் திசையெல்லாம் ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனையில் குவிந்து வருவதால் உறவுகளை தேடி கண்ணீருடன் குடும்படுத்தினர் கதறி துடிக்கின்றனர். இதனிடையே திருச்சி, திண்டுக்கல் ஆட்சியர்கள் கரூருக்கு செல்ல தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் திருச்சி, கோவையில் இருந்து தேவையான மருத்துவர்கள் கரூருக்கு செல்லவும், மருத்துவத்துறை செயலாளர் நேரில் செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
34
கரூர் அரசு மருத்துவமனை
கரூர் அரசு மருத்துவமனையில் மொத்தமாக 74 படுக்கைகள் உள்ளன. இதில் தாய் வார்டில் உள்ள 30க்கும் மேற்பட்ட படுக்கைகளும் நிரம்பியுள்ளன. ஐசியு வார்டும் முழுவதுமாக நிரம்பியது. இன்னும் மயக்கமடைந்தவர்கள் தொடர்ந்து அழைத்து வரப்படுகின்றனர். கரூர் அரசு மருத்துவமனையில் இடம் இல்லாததால் சுற்று வட்டாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அதேசமயம் கரூர் அரசு மருத்துவமனையில் முதல் ஷிப்ட், இரண்டாம் ஷிப்ட் முடித்துவிட்டு சென்றவர்கள் விடுமுறையில் சென்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.