காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாங்கனித் திருவிழா ஜூலை 8 முதல் 11 வரை நடைபெறுகிறது. மாங்கனித் திருவிழா முன்னிட்டு நாளை நடைபெற உள்ளதால் காரைக்கால் பகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அடியாராக இருந்து இறைவனுக்கு இணையாகப் போற்றப்பட்டவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட வருமான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா 4 நாள்கள் வெகு விமர்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் காரைக்கால் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள்.
24
மாங்கனித் திருவிழா
அந்த வகையில் இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா கடந்த 08 முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்களுக்கு மாம்பழங்களை பொழியும் 'மாங்கனித் திருவிழா' நாளை நடைபெற உள்ளது அடுத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
34
உள்ளூர் விடுமுறை
இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சரும், கல்வித் துறை அமைச்சருமான நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: காரைக்காலில் புகழ் பெற்ற அருள்மிகு காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா கொண்டாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று சுவாமிகளின் திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்களுக்கு மாம்பழங்களை பொழியும் விழா ஜூலை 10-ஆம் தேதி நாளை நடைபெற உள்ளது. இந்த திருவிழா மிக முக்கியமான திருவிழா என்பதால் இதில், பக்தர்கள் பங்கேற்கும் விதமாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஒப்புதல் பெற்று காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழாவுக்காக காரைக்கால் பிராந்தியத்துக்கு ஜூலை 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறையானது காரைக்காலில் இயங்கி வரும் அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொருந்தும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஜூலை 19-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.