Teacher : பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திடுக.! முதலமைச்சருக்கு சென்ற முக்கிய கோரிக்கை

Published : Jul 09, 2025, 01:36 PM ISTUpdated : Jul 09, 2025, 01:37 PM IST

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் குறைந்த ஊதியம் மற்றும் பணி நிரந்தரமின்மை காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓ. பன்னீர்செல்வம் அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

PREV
14
ஆசிரியர்களும் ஊதியமும்

ஆசிரியர்கள் தான் மாணவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தில் முக்கிய படியாக உள்ளனர். அந்த வகையில் மாணவர்கள் மாதம் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்க கல்வியை போதிக்கும் பகுதி நேர ஆசிரியர்களுகு மாதம் 12500 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் குறைந்த அளவு ஊதியத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாத நிலையில் பரிதவித்து வருகிறார்கள். ]

தமிழகத்தில்அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் 2011 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டனர். ஆனால் தற்போது வரை உரிய ஊதியமும் இல்லாமல், பணிநிரந்தரமும் செய்யப்படாமல் உள்ளனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று பகுதி நேர ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

24
பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்

இந்தநிலையில்பகுதி நேர ஆசியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள். இசை ஆசிரியர்கள், 

உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று 2021 ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தது. தி.மு.க.வின் ஆட்சியே முடிவடையும் தருவாயில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை. இதுதான் "சொல்வதை செய்வோம்" என்பதற்கு இலக்கணம் போலும்.

34
மாதம் 12,500 ரூபாய் ஊதியம்

மக்களின் மீது அனைத்து வரிகளையும் சுமத்தி, ஆண்டொன்றுக்கு ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தை ஈட்டும் தி.மு.க. அரசு, ஆட்சி முடியும் தருவாயிலும் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையினை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது கடும் கண்டனத்திற்குரியது. 

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள் 2012 முதல் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாதம் 12,500 ரூபாய் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இவர்கள் இந்த சொற்ப ஊதியத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

44
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நியமனம்

இவர்கள் தங்களது பணி நிரந்தரக் கோரிக்கையினை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றாமல், அவர்களை கைது செய்து சமூக நலக் கூடங்களில் தங்க வைத்திருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும்.

 தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்துவதாக ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories