மகளிர் உரிமைத்தொகைக்கு ரேஷன் கார்டு கட்டாயம்.! 2 நிமிடத்தில் விண்ணப்பிப்பது எப்படி.?

Published : Jul 09, 2025, 11:18 AM IST

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளதால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருமணமானவர்கள், ரேஷன் கார்டை இழந்தவர்கள், திருத்தங்கள் செய்ய விரும்புவோர் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்.

PREV
15
ரேஷன் கார்டின் பயன்கள்

ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்கள் இலவச மற்றும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சுமார் 2 கோடிக்கும் மேலான ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன் கார்டுகள் மூலம் முன்னுரிமை குடும்ப அட்டை (PHH) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.

 இதே போல சக்கரை அட்டை, மண்ணெண்ணெய் அட்டை, கோதுமை அட்டை என பல வகை அட்டைகள் உள்ளது. ரேஷன் கார்டு பிற அரசு சேவைகளுக்கு ஆவணமாகவும், சமையல் எரிவாயு சிலிண்டர் விண்ணப்பத்திற்கு முகவரி சான்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமில்லாமல் தமிழக அரசு ரேஷன் அட்டையை முன்னுரிமையாக வைத்தே வெள்ள நிவாரண தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

25
மகளிர் உரிமை தொகை பெற ரேஷன்கார்டு

இந்த நிலையில் தான் தமிழக அரசின் முக்கிய திட்டமான மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கிய சான்றாக லுள்ளது. எனவே ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் மொத்தம் 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 

இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், சுமார் 56.50 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதில் முக்கிய காரணங்களாக அரசு விதித்த நிபந்தனைகளுக்கு எதிராக இருப்பதால் உரிமை தொகை வழங்க மறுக்கப்பட்டது. மேலும் ரேஷன் அட்டைகள் இல்லாததும் முக்கிய காரணமாக கூறப்பட்டது

35
மகளிர் உரிமை தொகை விரிவாக்கம்

இதனையடுத்து சுமார் 3 லட்சம் பேர் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அப்போது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட்- செம்படம்பர் மாதத்திற்கு பிறகே மீண்டும் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 1.10 லட்சம் பேரு புதிதாக ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

 இதற்கிடையே மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாமானது வருகிற 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கப்படவுள்ளது. இதனையடுத்து இந்த திட்டத்தில் இணைய பல லட்சம் மகளிர்கள் தயாராக உள்ளனர். அதே நேரம் மகளிர் உரிமை தொகை பெற ரேஷன் அட்டைகள் முக்கிய ஆதாரமாக உள்ளதால் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகிறார்கள்.

45
புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி,?

இந்த நிலையில் யாரெல்லாம் ரேஷன் கார்டு பெற தகுதியுள்ளவர்கள்.? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி.? என்ற தகவலை தற்போது பார்க்கலாம்.

புதிய ரேஷன் கார்டு -யார் விண்ணப்பிக்கலாம்?

  • புதிய ரேஷன் கார்டு பெற புதிதாக திருமணமானவர்கள்
  • ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்ய விரும்புபவர்கள்
  • ரேஷன் கார்டு இழந்தவர்கள் அல்லது பழைய கார்டை புதுப்பிக்க விரும்புவோர்

புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி.?

புதிதாக திருமணமானவர்கள் தங்கள் பெற்றோருடன் உள்ள ரேஷன் அட்டையில் உள்ள பெயரை நீக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களை பெற்று புதிதாக ரேஷன்கார்டுகள் விண்ணத்தோடு இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பெற்றோருடன் ஒரே வீட்டில்  இருந்தால்  புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாது. அதற்கு பதிலாக பெற்றோர் ரேஷன் அட்டையில் திருமணமானவர்களின் பெயர்கள் இணைக்கப்படும்.  திருமணமானவர்கள வேறு ஒரு வீட்டில் இருந்தால் புதிய ரேஷன் கார்டுகள் பெற தகுதியுடையவர்களாவர். 

55
ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கும் முறை:

ரேஷன் கார்டு பெற இணைக்க வேண்டிய ஆவணங்கள்

  • முகவரி சான்று (மின் கட்டணம், வாடகை ஒப்பந்தம், வாக்காளர் அடையாள அட்டை)
  • ஆதார் கார்டு

ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி.?

ரேஷன் கார்டை விண்ணப்பிக்க அரசு அதிகாரப்பூர்வ இணையதளமான : https://tnpds.gov.in என்ற தளத்திற்கு செல்ல வேண்டும். அல்லது மொபைல் ஆப் மூலமாக “TNeGA” அல்லது “TNPDS” என்ற அதிகாரப்பூர்வ செயலியை பதிவிறக்கம் செய்து அதிலும் விண்ணப்பிக்கலாம்.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க “TNPDS” என்ற வெப்சைட் முகப்புப் பக்கத்தில் “Smart Card Application” என்பதை தேர்வுசெய்ய வேண்டும். தங்களுக்கு எந்த மொழி வசதியாக உள்ளதோ அதற்கு ஏற்ப தமிழ் அல்லது English தேர்வுசெய்து கொள்ளலாம். 

இதன் தொடர்ந்து “Apply for New Smart Card” என்பதை கிளிக் செய்யவும். இதனையடுத்து விண்ணப்பப் படிவத்தை கேட்கப்பட்டுள்ள தகவல்களான குடும்பத் தலைவர் பெயர், குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது, முகவரி (வீட்டு எண், தெரு, மாவட்டம், பின் குறியீடு), தொடர்பு, ஆதார் எண் (தலைவரும் மற்றும் உறுப்பினர்களின்), மின்னஞ்சல் மற்றும் கைபேசி எண், புகைப்படம் மற்றும் ஆதார் ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும் மற்றும் தேவைப்படும் பட்சத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

குடும்ப தலைவரின் புகைப்படம், பழைய ரேஷன் கார்டு நகல் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா.? என்பதை சரிபார்த்த பின்னர்  "Submit" செய்ய வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும், ஒரு எண் கிடைக்கும். இதை பதிவு செய்து வைக்கவும். இதனை தொடர்ந்து புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளதை தெரிந்து கொள்ளலாம். பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்களுக்கு ஒப்புதல் கிடைத்ததா.? என்பதையும் சரி பார்த்துக்கொள்ளலாம். 

அந்த வகையில் விண்ணப்ப நிலையை பார்க்க முகப்புப் பக்கத்தில் உள்ள “Application Status” பகுதியை சென்று, உங்கள் பதிவு எண்னை உள்ளீடு செய்து நிலையை பார்வையிடலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories