தி.மு.க. எம்.பி கனிமொழி, 'பராசக்தி' (2026) திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் விதித்த வெட்டுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். தணிக்கை வாரியம், அமலாக்கத்துறை போன்றவை ஆளுங்கட்சியின் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.பி கனிமொழி, சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ‘பராசக்தி’ (2026) திரைப்படம் மற்றும் அதன் படக்குழுவினர் பிரதமர் மோடியைச் சந்தித்தது குறித்துத் தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.
தணிக்கை வாரியம் (Censor Board) ஆளுங்கட்சியின் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாக அவர் இந்தக் கூட்டத்தில் குற்றம் சாட்டினார்.
25
தேர்தல் வந்தால் போதும்...
"தேர்தல் வரும்போது மட்டும் பொங்கல் பண்டிகையும், தமிழர்களும் நினைவுக்கு வருபவர்களைப் பற்றிப் பேசிப் பயனில்லை. தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க நினைப்பவர்களைத் தமிழ் மக்கள் நம்பி ஏமாறத் தயாராக இல்லை," என்று பா.ஜ.க-வைச் சாடினார்.
"1952-ல் கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய 'பராசக்தி' திரைப்படமே சென்சார் காரணமாகப் பல பிரச்சினைகளைச் சந்தித்தது. தற்போது வெளியாகியுள்ள 'பராசக்தி' (2026) திரைப்படமும் சென்சார் போர்டால் பல வெட்டுக்களைச் சந்தித்துள்ளது," என்று குறிப்பிட்டார்.
35
சென்சார் போர்டுக்கு கண்டனம்
தணிக்கை வாரியம், அமலாக்கத்துறை (ED), சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகள் மக்களுக்கு எதிராகவும், ஆளுங்கட்சியின் அரசியல் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்தப் படம், 1960-களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்குத் தணிக்கை வாரியம் 25 இடங்களில் வெட்டுக்களை (Cuts) பரிந்துரைத்தது. குறிப்பாக இந்தி திணிப்பு தொடர்பான வசனங்கள் மற்றும் 'தீ பரவட்டும்' போன்ற முக்கிய வாசகங்களை மாற்ற உத்தரவிட்டிருந்தது.
55
பிரதமருடனான சந்திப்பு
இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும், டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் படக்குழுவினர் (சிவகார்த்திகேயன், ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர்) பிரதமர் மோடியைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.