மாடு பிடிச்ச தம்பிக்கு கார்.. பிடிபடாத மாட்டுக்கு டிராக்டர்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ரிசல்ட்ஸ்!

Published : Jan 15, 2026, 07:01 PM IST

மதுரை அவனியாபுரத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில், 22 காளைகளை அடக்கிய பாலமுருகன் முதலிடம் பிடித்து காரை வென்றார். விருமாண்டி பிரதர்ஸ் காளை சிறந்த காளையாகத் தேர்வு செய்யப்பட்டது.

PREV
14
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை அவனியாபுரத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு இன்று (ஜனவரி 15, 2026) உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 7:30 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டி, 12 சுற்றுகளாக விறுவிறுப்புடன் நடைபெற்று மாலை 6:30 மணியளவில் நிறைவடைந்தது.

24
22 காளைகளை அடக்கிய பாலமுருகன்

• முதலிடம்: 22 காளைகளை லாவகமாக அடக்கிய வளையங்குளம் பாலமுருகன் முதலிடம் பிடித்தார். இவருக்குத் தமிழக முதலமைச்சர் சார்பில் வழங்கப்பட்ட ₹8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது.

• இரண்டாமிடம்: 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்தி இரண்டாம் இடத்தைப் பிடித்து மோட்டார் சைக்கிளைப் பரிசாக வென்றார்.

• மூன்றாமிடம்: 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

34
தெறிக்கவிட்ட விருமாண்டி பிரதர்ஸ் காளை

மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடிய விருமாண்டி பிரதர்ஸ் மந்தை முத்துக்கருப்பனின் காளை சிறந்த காளையாகத் தேர்வு செய்யப்பட்டது. சுமார் 60 வினாடிகள் யாரையும் நெருங்க விடாமல் சீறிப்பாய்ந்து விளையாடிய இந்தக் காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

44
57 வீரர்களுக்குக் காயம்

• அவிழ்த்து விடப்பட்ட காளைகள்: 937

• பங்கேற்ற வீரர்கள்: 561 பேர் (573 பேர் பதிவு செய்திருந்த நிலையில், மருத்துவச் சோதனைக்குப் பின் 561 பேர் அனுமதிக்கப்பட்டனர்).

• காயங்கள்: மாடு முட்டியதில் மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட மொத்தம் 57 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டுப் பயணிகளும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories