இது தொடர்பாக பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், ''கரூரில் நடந்த மரணங்கள், இந்த விபத்து, கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்ததால் மட்டுமே நடந்தது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை சுமார் ஒன்பது மணி நேரம் மக்களைக் காத்திருக்க வைத்துள்ளார்.
பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்
அதனால் உணவு, தண்ணீர் இல்லாமல், கொளுத்தும் வெயிலில் மக்கள் மயங்கி விழுந்தனர். சொன்னபடி 12 மணிக்கு வந்திருந்தால், பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் விஜய் அதை ஏற்க விரும்பவில்லை. வேறு எதையோ பேசுகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விஜய் இந்த வழக்குக்காக விசாரனைக்கு ஆஜராகி விட்டு வந்த நிலையில், திமுக கரூர் விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளது.