ஒரே ஆண்டில் இத்தனை கோடி வருமானமா.? வேட்புமனுவில் வெளியான கமலின் சொத்து மதிப்பு

Published : Jun 06, 2025, 11:02 PM IST

தமிழக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கமல்ஹாசன், பி.வில்சன் உள்ளிட்டோரின் சொத்து விவரங்கள் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

PREV
14
ராஜ்யசபா தேர்தல் - வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 ராஜ்யசபா பதவியிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் ராஜ்யசபா தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. திமுக சார்பாக 4 பேரை தேர்வு செய்ய முடியும், அதிமுக சார்பாக 2 பேரை தேர்வு செய்ய இயலும். 

இதனையடுத்து திமுக சார்பாக வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, திமுக நிர்வாகி சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இதே போல அதிமுக சார்பாக வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24
கமல்ஹாசனின் சொத்து மதிப்பு என்ன.?

வேட்புமனு தாக்கல் வருகிற ஜூன் 9ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், இன்று திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தனர். இதனையடுத்து கமல்ஹாசன் உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த மனுவில் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. இதன் படி, நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், சென்னை புரசைவாக்கம் சர் எம் சிடி., முத்தையா செட்டியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

34
கமல்ஹாசனுக்கு கையிருப்பு தொகை

2023-24-ஆம் நிதியாண்டில் வருவாய் ரூ.78.90 கோடி கிடைத்துள்ளதாகவும், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடியாகும். ஒட்டுமொத்த அசையா சொத்துகளின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன்களாக ரூ.49.67 கோடி உள்ளதாகவும்,

 கையிருப்பில் உள்ள பணத்தை பொறுத்தவரை ரூ.2.60 லட்சம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மகேந்திரா பொலிரோ, மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ., லக்சஸ் ஆகிய நான்கு கார்கள் இருப்பதாகவும் இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
வில்சன் சொத்து மதிப்பு என்ன.?

திமுக வேட்பாளர்கள் பி.வில்சன் சொத்து மதிப்பும் வெளியாகியுள்ளது. அதில் கையிருப்பில் ரூ.15 லட்சம் உள்ளதாகவும், மனைவி ஆர்.வான்மதியிடம் ரூ.1.40 லட்சம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவியிடம் ரூ.3.27 கோடி மதிப்பில் உள்ளது. விவசாய நிலம் உட்பட எனது பெயரிலான அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.28.08 கோடி.

 மனைவி பெயரிலான சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.11.72 கோடியாகும். மேலும் பென்ஸ், டோயோட்டோ, மகேந்திரா போன்ற கார்கள் இருக்கின்றன. மொத்தமாக அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.12.58 கோடி. ஒட்டுமொத்த கடன்களாக இருவருக்கும் சேர்த்து ரூ.1.15 கோடி இருக்கிறது என வேட்புமனு பிரமான பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories