தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாத கடைசி நாளில் போகிப் பண்டிகையுடன் தொடங்கிய விழா, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் என களைகட்டியது. இதையடுத்து, இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
ஏராளமானோர் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களில் கூடி காணும் பொங்கலை கொண்டாடுவர் என்பதால் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
காணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடும் மெரினா, பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரைகளிலும், கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.குற்ற நிகழ்வுகளை தடுக்க ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் காவல்துறை தெரிவித்துள்ளது.