களத்தில் இறங்க தயாராகும் காளைகள்
இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கான மேடை, வாடிவாசல், காளைகளை சேகரிக்கும் இடம் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த போட்டியில் மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட காளையர்கள் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.
மேலும் ஆம்புலன்ஸ் செல்வதற்கான வசதிகளும், மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவி கிடைப்பதற்காக கோவை அரசு மருத்துவமனை தயார் நிலையில் இருக்கும் படி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.