மன நிம்மதியை கொடு பாபா.! திடீரென இமயமலைக்கு ஆன்மிக பயணம் புறப்பட்ட அண்ணாமலை

தமிழக பாஜகவில் அண்ணாமலை மாற்றப்பட்டு தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக உடனான கூட்டணிக்கு வழி வகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இமயமலைக்கு சென்றுள்ள அண்ணாமலை பாபாவை வணங்கியுள்ளார்.

Annamalai went on a spiritual journey to the Himalayas Baba Temple KAK

Annamalai in the Himalayas Baba Temple : தமிழகத்தில் திமுக- அதிமுக என மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில், மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக தமிழகத்தை குறி வைத்து காய் நகர்த்தியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. 2014ஆம் ஆண்டு முதல் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எல்.முருகன் என அடுத்தடுத்து பாஜக தலைவர்கள் நியமித்தது. இதனால் பட்டி தொட்டி பாஜக இல்லாத இடமே இல்லாத அளவிற்கு வளர்ச்சி அடைந்தது.

Annamalai went on a spiritual journey to the Himalayas Baba Temple KAK
Tamil Nadu BJP change

தமிழகத்தை குறிவைத்த பாஜக

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட வாக்குகளை பாஜக பெற்றதையடுத்து மாநில தலைவராக இருந்த தமிழிசைக்கு ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டது.  அடுத்ததாக  2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தல் களத்தில் இறங்கியது. இதில் பல ஆண்டுகளுக்கு பிறகு 4 எம்எல்ஏக்களோடு சட்டமன்றத்திற்கு நுழைந்தது பாஜக. இதற்கு பரிசாக பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 


ADMK BJP alliance

அண்ணாமலையின் அதிரடி அரசியல்

அடுத்தாக ஐபிஎஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்து அரசியலுக்கு வந்த அண்ணாமலைக்கு பாஜக மாநில தலைவர் பதவி 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அண்ணாமலையின் அதிரடி அரசியலால் ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் அதிர்ச்சி அடைந்தது. தமிழகத்தில் எதிர்கட்சி யார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் உருவானது.

அண்ணாமலையும் அதிமுக மூத்த தலைவர்களை கடுமையாக விமர்சித்ததால் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுக- பாஜக கூட்டணி முறிவை சந்தித்தது. இதனையடுத்து இரண்டு கட்சிகளும் தனித்து போட்டியிட்ட நிலையில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.  இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்த அதிமுக திட்டம் போட்டது.

Annamalai Himalayas Baba Temple

இமயமலையில் அண்ணாமலை

ஆனால் பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை இருக்கும் வரை கூட்டணி உடன்படாது என்ற காரணத்தால் பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து கூட்டணிக்கு வழி வகுத்தது. இதனையடுத்து பாஜக மேலிடமும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க அதிமுக- பாஜக கூட்டணி முக்கியம் என அறிந்தது.

இதனால் இதற்கு இடையூறாக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அண்ணாமலை டெல்லி சென்ற நிலையில் நேற்று இமயமலைக்கு சென்று பாபா கோயிலுக்கு சென்று வணங்கியுள்ளார். இது தொடர்பாக புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பாபாவின் முத்திரையோடு அண்ணாமலை காட்சியளிக்கிறார். 

Latest Videos

vuukle one pixel image
click me!