சந்தோஷத்தில் குதிக்கும் பள்ளி மாணவர்கள்.! பள்ளிக்கல்வித்துறை எடுத்த முக்கிய முடிவு

Published : Apr 14, 2025, 09:50 AM IST

தமிழக பள்ளிகளில் 2025-2026 கல்வியாண்டில் AI மற்றும் கோடிங் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

PREV
15
சந்தோஷத்தில் குதிக்கும் பள்ளி மாணவர்கள்.! பள்ளிக்கல்வித்துறை எடுத்த முக்கிய முடிவு
school student

Tamilnadu School AI curriculum : கல்வி தான் ஒரு மாணவனை உயர்ந்த நிலையை அடைய வைக்கமுடியும். எனவே கல்வி இல்லாத மனிதன் முழு மனிதனே இல்லையென கூறுவார்கள். எனவே நவ நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ப மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களும் காலத்திற்கு ஏற்ப தங்களை அப்டேட் செய்து கொள்ள முடிகிறது. இந்த நிலையில் கணிணி காலத்தில் இருந்து மாறி தற்போது AI தொழில் நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது.

25
Tamilnadu School AI curriculum

உயர் தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள்

எனவே இதற்கு ஈடு கொடுக்கும் வகையில், பள்ளிகளை நவீனப்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் 6000 க்கும் மேற்பட்ட  மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட உள்ளது. 2000 மேற்பட்ட ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படுகிறது.  அதற்கு ஏற்ப தமிழகத்தில் உள்ள பள்ளிகளில்  2025-2026 கல்வியாண்டில் தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்திற்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில்,

35
ai technology

பாடத்திட்டத்தில் AI மற்றும் கோடிங்  முறை

6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் AI மற்றும் கோடிங்  முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம் தொடர்பாக பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது. இதனிடையே  பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, கோடிங் முறை, ரோபாட்டிக்ஸ் மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றின் அடிப்படைகளை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இறுதி செய்து வருகிறது.

45
artificial intelligence

பைதான் தொழில்நுட்ப பயற்சி

 பள்ளி மாணவர்கள் ஸ்க்ராட்ச் மற்றும் பிளாக்லி போன்ற காட்சி அடிப்படையிலான  கருவிகளுடன் பாடங்கள் வழங்கிடும் வகையிலும், பைதான் தொழில்நுட்ப பயற்சிகளும் இடம்பெறும் என கூறப்படுகிறது.  இந்த முயற்சியில், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப கல்வி மற்றும் கற்றல் ஆதரவு (TEALS) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது.
பள்ளிகளில் புதிய பாட திட்டம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் கூறுகையில்,  

55
Tamil Nadu schools artificial intelligence

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். பள்ளிகளில் AI மற்றும் கோடிங்  முறையை அறிமுகம் செய்யப்படவுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories