உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு பிப்.8ல் பிரமாண்ட விழா நடத்தும் ஜாக்டோ ஜியோ

Published : Jan 27, 2026, 07:02 PM IST

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி நன்றி தெரிவித்து பிரமாண்ட விழா நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

PREV
14
பழைய ஓய்வூதிய திட்டம்

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு ஊழியர்களின் கோரிக்கையை அறிந்து திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமென திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டது.

24
உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டம்

ஆனால் முதல்வரின் குழு அமைப்பு நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். மேலும் இந்த புதிய ஓய்வூதிய திட்டம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கும் வந்துள்ளது.

34
அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம்

ஆனால் முதல்வரின் அறிவிப்பு ஏமாற்று வேலை. நாங்கள் கேட்டது பழைய ஓய்வூதிய திட்டம் அது தான் எங்களுக்கு வேண்டும், உறுதி படுத்தப்பட்ட ஓய்வூதியம் எங்களுக்கு தேவையில்லை என அரசு ஊழியர்களின் குறிப்பிட்ட பிரிவினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.

44
முதல்வருக்கு பாராட்டு விழா

இந்த நிலையில் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை YMCA மைதானத்தில் வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி ஜாக்டோ ஜியோ சார்பில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் தாஸ் அறிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories