தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திரைப்பட நடிகை குறித்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய கருத்து சர்ச்சையான நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண்களைக் கேவலமாகப் பேசுவது என்றால் தீய சக்தி திமுக நிர்வாகிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அப்படி என்ன ஆனந்தம் தெரியவில்லை. கோவையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை மிகவும் இழிவுபடுத்தும் வகையில் பேசியும், குறிப்பாக நடிகை திரிஷாவை விமர்சித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
23
பெண்களை இழிவாக பேச யார் உத்தரவிட்டார்களோ..?
மாற்று கட்சியினரை அரசியல் ரீதியாக விமர்சிப்பதை விட்டுவிட்டு இப்படி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி தங்களின் தரத்தை தாங்களே குறைத்துக் கொள்வது திமுக நிர்வாகிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை மேடைகள் தோறும் பெண்களை இழிவாகப் பேசுங்கள் என்று யார் உத்தரவிட்டார்களோ தெரியவில்லை பல மேடைகளில் அவரின் பேச்சு பெண்களை அவமதிப்பதாகவே உள்ளது.
33
இனியும் வேடிக்கை பார்க்க மாட்டோம்..
ஆனால் இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் கண்டும் கேட்டும் எதிர்ப்புகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சில நாட்கள் நீக்கி விட்டு மீண்டும் அவரை கட்சியில் சேர்த்து இப்படி பேச வைத்துள்ளதுதான் விடியா திமுகவின் கொள்கை. தமிழகத்தில் பொம்மை ஆட்சி நடத்துவதுபோல் தனது தலைமையிலான கட்சி நிர்வாகிகள் பேசுவதையும் கண்டு கொள்ளாமல் இருப்பது கடும் அதிருப்தியை அளிக்கிறது.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்றோர்கள் அரசியலுக்கே லாயக்கற்றவர்கள். இனியும் இதுபோல் மேடைகளில் பெண்கள் அவமதிப்பதுபோல் பேசினால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்..! #DMKFailsTN