தகுதியானவர்கள் ரேஷன் கார்டு போன்ற அடிப்படை ஆவணங்களுடன் விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். சரியான தகுதி மற்றும் ஆவணங்கள் இருந்தால், வேலைவாய்ப்பு உருவாக்க இந்த அரசு திட்டத்தை பயன்படுத்தலாம்.
தமிழ்நாடு அரசு, சுய தொழில் தொடங்க விரும்பும் மக்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் திட்டங்களின் நோக்கம். அந்த வகையில், ரேஷன் கார்டு உள்ளிட்ட அடிப்படை ஆவணங்கள் இருந்தால் ரூ.25 லட்சம் வரை கடனுதவி பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சிறு வணிகம், விவசாயம், பாரம்பரிய தொழில்கள் போன்றவற்றை தொடங்க அரசு நேரடியாக ஆதரவு அளிக்கிறது.
25
சுய உதவிக் குழு கடன்
இந்த கடன் உதவி திட்டங்களை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEEDCO) செயல்படுத்துகிறது. இது தமிழக அரசின் கீழ் இயங்கும் நிறுவனம். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் பல ஆண்டுகளாக இந்த கழகம் செயல்பட்டு வருகிறது. தனிநபர்கள் தவிர, சுய உதவிக் குழுக்கள் இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
35
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
இந்த கடன் உதவிக்கு சில முக்கிய தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 60 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். மேலும், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த கடனுதவி வழங்கப்படும். இந்த நிபந்தனைகள் மூலம் உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு உதவி கிடைக்க அரசு முயற்சி செய்கிறது.
TABCEEDCO மூலம் தனிநபர் கடன் திட்டம் மற்றும் குழுக் கடன் திட்டம் வழங்கப்படுகிறது. தனிநபர்கள் சிறு வணிகம், விவசாயம், கைவினை மற்றும் பாரம்பரிய தொழில்கள் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் பெறலாம். ரூ.1.25 லட்சம் வரை 7% வட்டி, ரூ.1.25 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 8% வட்டி விதிக்கப்படுகிறது. திருப்பிச் செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை. சுய உதவிக் குழுக்களுக்கு ஒருவருக்கு ரூ.1.25 லட்சம் வரை, ஒரு குழுவுக்கு அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை 7% வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. குழு குறைந்தது 6 மாதங்கள் செயல்பட்டிருக்க வேண்டும். அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் வரை குழுவில் இருக்கலாம். ஆண், பெண் இருபாலருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
55
கறவை மாடு கடன் & தேவையான ஆவணங்கள்
பால் உற்பத்தியாளர்களுக்காக தனி கறவை மாடு கடன் திட்டமும் உள்ளது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஒரு மாட்டிற்கு ரூ.60,000 வீதம், இரண்டு மாடுகள் வரை ரூ.1.20 லட்சம் கடன் 7% வட்டியில் வழங்கப்படுகிறது. திருப்பிச் செலுத்தும் காலம் 3 ஆண்டுகள். இந்த அனைத்து திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க ஜாதிச் சான்றிதழ், ரேஷன் கார்டு, வருமானச் சான்று, அடையாள ஆவணங்கள் அவசியம். கூடுதல் விவரங்களுக்கு TABCEEDCO-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.