‘‘எப்போதும் திமுக தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்று அழைப்பார்கள். இந்தமுறை தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கலாம்" என திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கலாம். ஆனால், அதிலிருந்து எதுவும் நிறைவேற்றப்படாது என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும். நிச்சயமாக திமுகவின் தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். நாங்கள் வாக்குறுதி கொடுத்தால் அதை நிச்சமயமாக நிறைவேற்றுவோம் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். அது மட்டும் இல்லாமல் அடுத்து ஆட்சிக்கு வரப்போவதும் நாங்கள் தான். அதனால் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றப் போவதும் நாங்கள் தான். எப்போதுமே திமுகவின் தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்ற அழைப்பார்கள். இந்த தேர்தலில் தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கலாம்.