RAIN CHENNAI
வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. அக்டோபர் மாதம் மத்தியில் சென்னையில் ஆரம்பித்த மழையானது மதுரை, கோவை, ராமேஸ்வரம் என கொட்டோ கொட்டு என கொட்டியது. இதனையடுத்து தற்போது உருவான ஃபெஞ்சல் புயல் சென்னையை மட்டுமல்ல புதுச்சேரி. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை என 14 மாவட்டங்களை புரட்டிப்போட்டது. தற்போது மீண்டும் பலத்தோடு ஃபெஞ்சல் புயல் அரபிக்கடலில் முகாமிட்டுள்ளது.
heavy rain in tamilnadu
புரட்டிப்போட்ட புயல்
புயல் பாதிப்பால் பல வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்திற்கு தற்போது ஒரு வாரம் மழை ஓய்வு கொடுத்துள்ளது. அந்த வகையில் வருகிற டிசம்பர் 10ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து மழைக்கான சாதகமான நிகழ்வு உருவாகி வருவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தனியார் வானிலை ஹேமச்சந்திரன் கூறுகையில்,
Cyclone
உருவாகிறது புயல் சின்னம்
இன்று (டிசம்பர் 4 ஆம் தேதி) முதல் தமிழகத்தில் மழையின் தாக்கமானது படிப்படியாக குறையும், மீண்டும் வருகிற டிசம்பர் 10ஆம் தேதிக்கு பிறகு கடல் சார்ந்த நிகழ்வுகள் சாதகமாக உள்ளது. அதன் படி டிசம்பர் 10 ஆம் தேதி முதல் 15 தேதிக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா .? என்பதை தொடர்ந்து பார்க்கனும், அதே நேரத்தில் டிசம்பர் 20ஆம் தேதிக்கு பிறகு ஒரு வலுவான புயல் சின்னம் உருவாகுவதற்கான சாதகமான நிலை உள்ளது.
Cyclone Alert
தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு
இந்த நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் இரண்டு அல்லது 3 சுற்று மழை வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது என ஹேமச்சந்திரன் கூறினார். அதில் ஒன்று வலுவாக தீவிரம் அடைந்த வடகிழக்கு பருவமழையாக இருக்கும் என தெரிவித்தார். டிசம்பர் 12 முதல் 15 ஆம் தேதி காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யும் நிகழ்வு தொடங்கும். அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் பலத்த காற்று பாதிப்பு இல்லையெனவும் தெரிவித்தார்.
cyclone alert
அச்சுறுத்த வரும் புதிய புயல்
மேலும் டிசம்பர் 3 வார இறுதியில் தென் சீனா கடல் பகுதியில் இருந்து வங்க கடலில் ஒரு புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், அந்த வகையில் ஏற்கனவே தென் சீனா கடல் பகுதியில் இருந்து வரக்கூடிய புயல் சின்னம் வலு அதிகரித்து காணப்படும் .
ஏற்கனவே வர்தா, தானே போன்ற புயல்கள் எல்லாம் தென் சீனா கடல் பகுதிகளில் இருந்து தான் டிசம்பர் இறுதி நாட்களில் தமிழகத்திற்கு வந்துள்ளது. அந்த புயல்கள் எல்லாம் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களை பதம் பார்த்துள்ளது.
chennai cyclone alert
சென்னையை நோக்கி வரும் புயல்
அந்த வகையில் டிசம்பர் 20ஆம் தேதி வரக்கூடிய நிலை உள்ளது. இதனால் மக்கள் அச்சப்பட வேண்டிய தேவை இல்லை. பருவமழை முடியவில்லை இன்னும் மழை உள்ளது. என்பதை மக்களும் அரசும் புரிய வேண்டும் என தெரிவித்தார். மேற்கு பசிபிக் மற்றும் தென் சீனா கடல் பகுதியில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து வருகின்ற புயல்கள் எல்லாம் வலுவாக இருந்துள்ளது.
அடுத்தடுத்து வருகின்ற சலனங்கள் ஆந்திராவிற்கோ ஒடிசாவிற்கோ செல்ல வாய்ப்பில்லை . அல்லது குமரி கடல் வழியாக தெற்கே செல்ல வாய்ப்பில்லை. சென்னை முதல் நாகை வரை உள்ள பகுதிகள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறினார்.