பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.! குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

First Published | Dec 4, 2024, 8:58 AM IST

திருவள்ளுவர் சிலையின் 25-வது ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு, தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகளை அறிவித்துள்ளது. திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, குறும்படப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும்.

school student

மாணவர்களை ஊக்குவிக்க போட்டிகள்

தமிழக அரசு சார்பாக மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டிகளை நடத்தி மாணவர்களை ஊக்குவிக்கிறது. அந்த வகையில் விடுதலை போராட்டத்திற்காக உழைத்த தலவர்கள், தியாகிகளின் பிறந்தநாளையோட்டி போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

அந்த வகையில் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவையொட்டி மாணவர்களுக்கான போட்டியை அறிவித்துள்ளது. அதன் படி  திருவள்ளுவர் சிலை அமைந்து 25-வது ஆண்டு வெள்ளி விழா வருகிற டிசம்பர் 31-ம் தேதியும், ஜனவரி 1-ம் தேதி கன்னியாகுமரியில் கொண்டாடப்படவுள்ளது. 

Thiruvalluvar

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரிமுனையில் வானுயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா - வை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி 

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி 

3வயது முதல் 6 வயதுடைய மாணவ, மாணவிகள் ஏதேனும் 1 அதிகாரம் ஒப்புவிக்க வேண்டும்

7 முதல் 10 வயதுடைய மாணவ, மாணவிகள் ஏதேனும் 3 அதிகாரம் ஒப்புவிக்க வேண்டும்

8 வயது முதல் 14 வயதுடைய மாணவர்கள்  ஏதேனும் 5 அதிகாரம் ஒப்புவிக்க வேண்டும். 


STUDENT

போட்டிகள் என்ன.?

14 வயது முதல் 17 வயதுடையே மாணவர்களுக்கு கட்டுரை போட்டி 

வண்ண பூசுதல் போட்டியில் (Oil, Acrylic, Water Colour )அனைத்து வயதுடைய மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்

ஓவிய போட்டியில் ( Pencils & Crayons) அனைத்து வயதுடையவர்கள் பங்கேற்கலாம் 

திருக்குறளை மையமாக வைத்து 3 நிமிட குறும்பட போட்டியில் 17 வயது முதல் 21 வயதுடையவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் திருக்குறளை கொண்டு கவிதை போட்டியும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் tndiprmhkural@gmail.com என்ற TNDIPR மின்னஞ்சல் முகவரிக்கு 18/12/2024 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களால் நேரில் வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!