நீயா.? நானா.? போட்டி போடும் வெங்காயம், தக்காளி விலை.! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?

First Published | Dec 4, 2024, 7:03 AM IST

வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மழை மற்றும் ஏற்றுமதி காரணமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்துள்ளது.

tomato onion

தக்காளி, வெங்காயம் விலை

காய்கறிகள் இருந்தால் தான் சமையல் சிறக்கும், அந்த வகையில் எந்த வித சமையல் செய்தாலும் தக்காளியின் பங்கு முக்கியமானது. அதை விட வெங்காயத்தின் தேவையும் அதிகம். இந்த இரண்டு காய்கறிகளுக்கு மட்டுமே இல்லத்தரசிகள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே காய்கறி சந்தையில் விற்பனைக்காக தக்காளி மற்றும் வெங்காயம் டன் கணக்கில் லாரி லாரியாக வரும். அதனை மக்களும் கிலோ கணக்கில் வாங்கி செல்வார்கள். விலையும் மக்களுக்கு ஏற்றபடி இருந்தது.

tomato

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலை

குறிப்பாக ஒரு கிலோ தக்காளி 20 முதல் 25 ரூபாய்க்கும், வெங்காயம் தரத்தை பொறுத்து 30 முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த இரண்டு காய்கறிகளின் விலையோ நாளுக்கு நாள் தங்கத்தின் விலையை போல் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் வெங்காயம் ஒரு கிலோ 60 முதல் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி ஒரு கிலோ 55 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிலோ கணக்கில் வாங்கி சென்ற மக்கள் அரைகிலோ, ஒரு கிலோ என்ற அளவில் வாங்குகின்றனர்.


onion

விரைவில் விலை குறைய வாய்ப்பு

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம் காரணமாக அதிகளவு வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது மேலும் மழையின் பாதிப்பின் காரணமாக வெங்காய விளைச்சல் முற்றிலுமாக முடிந்துவிட்டதாகவும், வெங்காயம் சீசன் இல்லாததாலும் விலை உச்சத்தை தொட்டதாக கூறுகின்றனர். விரைவில் காரிஃப் வெங்காயம் வரத்து தொடங்கும் எனவும் இதனால் வெங்காய விலை குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ONION

மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு

இதே போல கன மழையின் காரணமாக தக்காளி செடிகள் கடும் பாதிக்கப்பட்டதாக கூறுகின்றனர். எனவே வரும் நாட்களில் மழையின் தாக்கம் குறையும் பட்சத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு அதிகளவு தக்காளி வரும் என வியபாரிகள் கூறுகின்றனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. 

Vegetables Price Today

காய்கறி விலை என்ன.?

இதன் படி பெரிய வெங்காயம் தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது அந்த வகையில் ஒரு கிலோ 45 முதல் 75 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும்,  தக்காளி ஒரு கிலோ 45 முதல் 65 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Vegetables Price

காய்கறி விலை இன்றைய நிலவரம்

கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும்,  முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும்,  பட்டர் பின்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 முதல் 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 150 முதல் 250 ரூபாய்க்கும்,

கத்தரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும்,  இஞ்சி ஒரு கிலோ 130 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 60ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
 

Latest Videos

click me!